
விவசாய நிலம், விவசாயத்துக்கு பயன்படாத நிலம், வீடு ஆகிய சொத்து பத்திரத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டயமாக்கி உத்தரவி்ட்டுள்ளதாக இணைதளங்களில் உலவிவரும் செய்தி தவறானது என்று மத்திய அரசு மறுத்துள்ளது.
வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும், வருமான வரி தாக்கல் செய்யும்போது, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் மத்தியஅரசு உத்தரவிட்ட நிலையில், இப்போது சொத்து பத்திரங்களுடன் ஆதார் இணைக்கவும் கட்டாயமாக்கியதாக அரசுமுத்திரையுடன் கூடிய அறிவிக்கை இணையதளங்களில் உலவிவந்தது.
அந்த அறிவிக்கையில், “ 1950ம் ஆண்டு முதல் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவசாய நிலம், விவசாயம் சாராத நிலம், வீடு என எதுவாக இருந்தாலும், அவற்றின் பத்திரத்தில் ஆதார் எண்ணை ஆகஸ்ட் 14-ந்தேதிக்குள் இணைத்து டிஜிட்டல் மயமாக்க வேண்டும். அத்துடன் நில பத்திரத்துடன், நில உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அப்படி இணைக்கப்படாத நில ஆவணங்கள், பினாமி பரிமாற்ற தடுத்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், இந்த செய்தி தவறானது என்று மத்திய செய்தித்துறையின் இயக்குநர் நோரன்ஹா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.