வௌிநாடு செல்லும் இந்தியர்களுக்கு ‘டிபார்ச்சர் கார்டு தேவையில்லை’ - ஜூலை 1 முதல் நடைமுறை

 
Published : Jun 19, 2017, 04:26 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
வௌிநாடு செல்லும் இந்தியர்களுக்கு ‘டிபார்ச்சர் கார்டு தேவையில்லை’  - ஜூலை 1 முதல் நடைமுறை

சுருக்கம்

no departure card for indians in airport

ஜூலை1-ந்தேதி முதல் வௌிநாட்டு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் விமான நிலையத்தில் ‘டிபார்ச்சர் கார்டு’ நிரப்பிக் கொடுக்கத் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம், வௌிநாடு செல்லும் பயணிகள், நீண்ட நேரம் குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேசமயம், ரெயில், கப்பல் மற்றும் சாலை மார்க்கமாக வௌிநாடு செல்லும் இந்தியர்கள் வழக்கம் போல் ‘டிபார்ச்சர் கார்டு’ நிரப்பிக்க கொடுக்க வேண்டும்.

இது குறித்து மத்திய வௌியுறவுத் துறை அமைச்சகம் வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமானநிலையங்களில் இருந்து வௌிநாடு செல்லும இந்தியர்கள் தங்களின் பெயர்,பாஸ்போர்ட் எண், பிறந்ததேதி, எந்த நாட்டுக்கு செல்கிறோம், விமான எண், முகவரி, தேதி உள்ளிட்ட விவரங்களைக் கொண்டு இருக்கும் ‘ டிபார்ச்சர் கார்டு’ நிரப்பிக் கொடுக்கும் முறை ஜூலை 1-ந் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

அதேசமயம், ரெயில், கப்பல் மற்றும் சாலை மார்க்கமாக வௌிநாடு செல்லும் இந்தியர்கள் வழக்கம் போல் ‘டிபார்ச்சர் கார்டு’ நிரப்பிக்க கொடுக்க வேண்டும். இதன் மூலம் வௌிநாடு செல்லும் இந்தியர்கள் நீண்ட நேரம் குடியேற்றதுறையில் காத்திருக்க வேண்டியது இல்லை. அதேசமயம், வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்கள், இதே போன்ற விவரங்களை நிரப்பிக் கொடுக்க வேண்டும் என்பது அவசியம்.

இந்தியாவுக்கு வரும் இந்தியர்கள், தாங்கள் கொண்டுவரும் பொருட்களில் வரிவிதிப்பு உட்படாத பொருட்கள் இல்லை என்பதை யும் தெரிவிக்கும் முறையும் தொடர்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!