தந்தையின் சடலத்தை 8.கி.மீ தூரம் பிள்ளைகள் ரிக்‌ஷாவில் இழுத்துச் சென்ற அவலம்!

First Published Mar 28, 2018, 2:48 PM IST
Highlights
No Ambulance Son Carries Mans Dead Body On Rickshaw In UP


இறந்துபோன தந்தையின் சடலத்தை எடுத்துச்செல்ல மருத்துவமனையில் ஆம்புலன்சே வசதி இல்லாததால் தந்தையின் உடலை பிள்ளைகள் சுமார் 8.கி.மீ தூரம் ரிக்‌ஷாவில் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றான உத்திரபிரதேசத்தில் நாளுக்கு நாள்  அவல சம்பவம் அரங்கேறி வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்படும் நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும்  மருத்துவமனையில் இறந்து போகும் நோயாளிகளை அவர்களது வீட்டிற்கு  அழைத்து செல்லக் கூட மருத்துவமனைகள் ஆம்புலன்சை அனுப்ப  முன்வருவதில்லை.

இதனால் இறந்தவர்களின் உறவினர்களே, இறந்த உடலை  தோளில் சுமந்தபடியும், சைக்கிளில், ஆட்டோ ரிக்ஷாவிலும் எடுத்துச் செல்லும் அவலங்கள்  நடந்து வருகிறது. இதற்கு அம்மாநில அரசும் இதுவரை  எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலம் பாராபங்கி பகுதியை சேர்ந்த மன்ஷரம் என்பவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு  முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒருவர் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையிலேயே இறந்துள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம், இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல எந்த ஒரு ஏற்பாடும் செய்து தர வில்லை. இதனால் இறந்தவரின் பிள்ளைகள், தங்களது அப்பாவின் உடலை 8 கி.மீ தொலைவு சைக்கிளில் இழுத்துச் சென்ற சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

click me!