ஆதார் இல்லையா ? இனி எந்த சலுகையும் இல்லை…மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…

 
Published : Jun 10, 2017, 06:01 PM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
ஆதார் இல்லையா ? இனி எந்த சலுகையும் இல்லை…மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…

சுருக்கம்

No adar no offers central govt announce

ஆதார் இல்லையா ? இனி எந்த சலுகையும் இல்லை…மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…

வரும் 30 ம் தேதிக்குப் பிறகு ஆதார் எண் இல்லாவிட்டால், மத்திய அரசின் சமூக நலத் திட்டங்களின் கீழ் கிடைக்கும் சலுகைகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது என உச்சநீதி மன்றத்தில்  மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஆதார் எண் தொடர்பான வழக்கு விசாரணையின் போது  உச்சநீதிமன்றத்தில்  மத்திய அரசு தெரிவித்துள்ள பதிலில், சமூக நல திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்கும் வசதி இல்லாதவர்கள், தொடர்ந்து சலுகைகளை பெற முடியும் என குறிப்படப்பட்டுள்ளது

ஆனால் வசதிகள் இருந்தும் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட மாட்டாது  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.மேலும், ஆதார் எண்ணை பதிவு செய்வதற்கான அவகாசத்தை ஜூன் 30 ஆம் தேதிக்குப் பிறகு  நீட்டிக்க முடியாது என்றும் ஏற்கனவே 95 சதவீதம் பேர் தங்களின் ஆதார் எண்ணை அரசு திட்டத்தில் பதிவு செய்து விட்டனர். அதனால் அவகாசத்தை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 . பான் கார்டு வாங்க ஆதார் கட்டாயம், வருமான வரி செலுத்த பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பவற்றிற்கு மட்டும் உச்சநீதிமன்றம்  இடைக்கால தடை விதித்திருப்பதால், சமூக நல திட்டங்களின் கீழ் சலுகைகளை பெற ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவு தொடரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது..

 

 

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!