கைலாசாவை அறிவித்து பீலா... கோமாளித்தனத்தால் சிக்கி சின்னாபின்னமாகப் போகும் நித்யானந்தா..!

By Thiraviaraj RMFirst Published Dec 5, 2019, 3:55 PM IST
Highlights

நித்தியானந்தா அறிவித்த கைலாசா என்ற தனிநாடு உருவாக வாய்ப்பே இல்லை  எனச் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 

ஐநா மற்றும் உலக நாடுகளின் அங்கீகாரம் கிடைக்காது என்பதால் நித்தியின் கனவு நனவாக சாத்தியமே இல்லை என அவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து வழக்கறிஞர் புருஷோத்தமன் கூறுகையில், ‘’ந்தியாவில் இருந்து குற்ற நடவடிக்கையில் சிக்கியுள்ள நித்யானந்தா அதிலிருந்து தப்ப முடியாது. இந்தியாவில் இவர் தவறு செய்த போது இவர் டிப்ளமேட் கிடையாது. ராஜாங்க விளக்குப்பெற்ற ஒரு நபர் கிடையாது. 

ஒரு இந்திய பிரஜையாக இவர் தவறு புரிந்திருக்கிறார். ஆகையால் இந்திய சட்டத்திற்கு அவர் எங்கிருந்தாலும் என்றைக்குமே கட்டுப்பட்டு ஆக வேண்டும். ஆகையால் இந்த தண்டனைகளில் இருந்து தப்பிப்பதற்காக தனி நாடு, தீவு எனக்கூறி யாரோ அவருக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்கள். இது அனுபவிமின்மையையும், அவரது குறைந்த பட்ச அறிவையும் காட்டுகிறது.

 

தனி நாடு வேண்டி ஐநா சபயையை நாடி மனு கொடுத்து விடலாம். ஒரு தனி நாட்டை உருவாக்க ஐநா சபையில் 183 உறுப்பு நாடுகளும் அதற்கு ஒப்புதல் தரவேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தனி நாடு உருவாகலாம். அதெல்லாம் நடக்க சாத்தியமே இல்லை. இதெல்லாம் கோமாளித்தனமான விஷயம். வழக்குகளில் இருந்து தப்பித்து விடலாம் என நினைக்கிறார். ஆனால், அவரால் தப்பிக்க முடியாது.  இந்தியாவில் செய்த குற்றத்திற்கு இந்தியாவில் அவர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்’’என அவர் தெரிவித்துள்ளார். சட்ட நிபுணர்களின் கருத்துப்படி பார்த்தால் நித்யானந்தாவுக்கு மேலும் நெருக்கடி அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள்.

இந்நிலையில், நித்தியானந்தாவை தேடுவதற்காக இண்டர்போல் உதவியை நாட முடிவு செய்துள்ள போலீஸார் புளு கார்னர் நோட்டீஸ் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். இமயமலையில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதையொட்டிய நாடுகளுக்கு சென்றிருக்கலாம் என தகவல் கிடைத்திருப்பதால் நித்தியானந்தா இருக்கும் இடத்தை அறிவதற்காக இண்டர்போல் உதவியை நாட இந்திய போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருகின்றன.

click me!