வீடியோவில் இருந்தது நித்யானந்தா, ரஞ்சிதாவும் தான்! கன்ஃபார்ம் செய்த தடயவியல் அறிவியல் ஆய்வகம்!

Asianet News Tamil  
Published : Nov 22, 2017, 01:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
வீடியோவில் இருந்தது நித்யானந்தா, ரஞ்சிதாவும் தான்! கன்ஃபார்ம் செய்த தடயவியல் அறிவியல் ஆய்வகம்!

சுருக்கம்

Nithyananda - Ranjitha video is true

சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா ஒன்றாக இருக்கும் வீடியோ காட்சி உண்மைதான் என்று டெல்லி தடய அறிவியல் ஆய்வகம் கூறியுள்ளது. இதையடுத்து நித்தியானந்தாவுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சாமியார் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருப்பதை போன்ற வீடியோ காட்சிகள் தனியார் டிவியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை, சாமியார் நித்யானந்தாவின் சீடரான லெனின் கருப்பன் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ குறித்து லெனின் கருப்பன், செய்தியாளர்களிடம் கூறும்போது, நித்யானந்தா இடம் பெற்ற ஆபாச விடியோ உண்மைதான் என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோ நவீன தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்டவை என்று நித்யானந்தா சார்பில் கூறப்பட்டது. நித்யானந்தா தியான பீடத்தின் நிர்வாகி, சென்னை பாண்டி பஜார் போலீசில், இந்த வீடியோவைக் காட்டி தங்களிடம் ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், லெனின் கருப்பன் வெளியிட்ட வீடியோ குறித்து, ஆய்வு செய்ய டெல்லியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. நித்யானந்தா-நடிகையுடன் இருந்த வீடியோவை ஆய்வு செய்த டெல்லி தடய அறிவியல் ஆய்வகம், நடிகையுடன் நித்யானந்தா இருக்கும் வீடியோ உண்மைதான் என்று சான்றளித்துள்ளது.

நித்தியானந்தா, நடிகையுடன் இருப்பது குறித்த வீடியோ உண்மைதான் என்று தடய அறிவியல் ஆய்வகம் கூறியுள்ள நிலையில் சாமியார் நித்யானந்தாவுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

PAN Card Rules: ஏப்ரல் 1 முதல் பான் கார்டுக்கு புது ரூல்ஸ்! இனி ஆதார் மட்டும் போதாது!
Ind Vs Pak Nuclear War: இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அணு ஆயுதப் போர்? வெளியான பரபரப்பு ரிபோர்ட்