இன்னும் 5 வருடம் கொடுத்தால் எல்லாத்தையும் சரி பண்ணிடுவோ..!! நிர்மலா சீதாராமன் நம்பிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 4, 2019, 2:45 PM IST
Highlights

அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்புத் துறையில் 100 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை செய்வதற்கு ஏற்ற இடமாக இந்தியா கட்டமைக்கப்பட்டு வருகிறது .  

இந்தியாவை உலகளவில் மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  தலைநகர் டெல்லியில் இந்தியா ஸ்வீடன் வணிக மாநாடு நடைபெற்று வருகிறது ,  இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர் .  அப்போது பேசிய அவர் இந்தியாவை மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாற்றுவதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு தயாராக உள்ளது என்றார். 

கார்ப்பரேட் வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது என அப்போது  கூறினார்.  முதலீட்டை அதிகளவில் ஈர்ப்பதற்கான நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு தொடர்ந்து  ஈடுபடும் என்றார் .  இந்திய அரசு வங்கி ,  சுரங்கம் ,  மற்றும் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க உள்ளது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.  அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்புத் துறையில் 100 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை செய்வதற்கு ஏற்ற இடமாக இந்தியா கட்டமைக்கப்பட்டு வருகிறது .  அதே நேரத்தில் தனிமனித வருமான வரி  குறித்து உரிய நேரத்தில்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

மேலும் வரிச்சலுகைகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படும் என்றார் .  பட்ஜெட்டுக்கு பின்னர் பல்வேறு துறையினருடன் பேச்சு நடத்தி அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க அடுத்த பட்ஜெட் வரை காத்திருக்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  அந்தவகையில் கார்ப்பரேட் நிறுவனங்களில் வரி குறைப்பும்  கட்டமைப்பு சீர்திருத்தமாகவே  அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார் .  இந்த ஒரு நடவடிக்கையே எங்கள் அரசு  சீர்திருத்தத்தின் மீது கொண்டுள்ள  நம்பிக்கையை காட்டுகிறது .  இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறோம் என்றும் அவர் கூறினார். 
 

click me!