நான் உயிரோடு இருப்பதற்கு கடவுள் தான் காரணம். என்னையும் எனது பீடத்தையும் பரமசிவனும், காலபைரவரும் பராசக்தியும்தான் காப்பாற்றுகின்றனர். அதுவும் நேரடியாக களம் இறங்கி காத்து வருகின்றனர். நான் ஒரு புறம்போக்கு, பரதேசி. என்னை யாராலும் பயமுறுத்த முடியாது. மானம், அவமானத்தை பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதே இல்லை என வீடியோவில் அவர் பேசி உள்ளார்.
நான் உயிரோடு இருப்பதற்கு கடவுள் தான் காரணம். என்னையும் எனது பீடத்தையும் பரமசிவனும், காலபைரவரும் பராசக்தியும்தான் காப்பாற்றுகின்றனர். அதுவும் நேரடியாக களம் இறங்கி காத்து வருகின்றனர் என வீடியோவில் நித்யானந்தா கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் சாதாரண குடிசையில் ஜோசியராக இருந்தவர் நித்தியானந்தா. அவரது உரை மற்றும் ஆன்மிக வழியால் ஈர்க்கப்பட்ட பெரும் பணக்காரர்கள், அவருக்காக சொத்துக்களை எழுதி வைக்க ஆரம்பித்தனர். இதில் நித்தியானந்தா காஸ்ட்லி சாமியார் ஆகிவிட்டார். பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் நாட்டின் பல இடங்களில் ஆசிரமங்களை நிறுவினார். தற்போது இவரது ஆசிரமத்தின் கிளைகள் வெளிநாடுகளிலும் உள்ளன.
இந்நிலையில், அவரது மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும், குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளது. இதனிடையே, தன் மகளை சாமியார் நித்யானந்தா கடத்தி கொண்டு சென்றுவிட்டதாக பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா புகார் அளித்துள்ளார். இதுதொடர்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு இடையே, நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுவிட்டதாக ஒரு தகவல் பரவி வந்தது.
மேலும், தென் அமெரிக்க நாடான ஈக்வடார் அருகே குட்டி தீவை விலைக்கு வாங்கிய நித்யானந்தா, தனிநாடு அந்தஸ்து கேட்டு ஐக்கிய நாடுகள் அவையை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமறைவாக இருந்தாலும் அவர் சமூகவலைதளங்ளில் வீடியோக்களை வெளியிட்டு ஆசிரம நிர்வாகிகளிடம் பேசி வருகிறார். அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் தனக்கு எதிராக சர்வதேச சதி நடப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வீடியோவில் கூறி இருப்பதாவது:- என் மீதும், ஆசிரமத்தின் மீதும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்காக பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய சதி செய்து எனக்கு எதிராக இதை நடத்துகிறார்கள். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், எனக்கு எதிரான அனைத்து செயல்களும் ஆவணப்படுத்தப்படுகின்றன. சர்வதேச சமூகம் இதைச் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இத்தனைக்கும் இடையே நான் உயிரோடு இருப்பதற்கு கடவுள் தான் காரணம். என்னையும் எனது பீடத்தையும் பரமசிவனும், காலபைரவரும் பராசக்தியும்தான் காப்பாற்றுகின்றனர். அதுவும் நேரடியாக களம் இறங்கி காத்து வருகின்றனர். நான் ஒரு புறம்போக்கு, பரதேசி. என்னை யாராலும் பயமுறுத்த முடியாது. மானம், அவமானத்தை பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதே இல்லை என வீடியோவில் அவர் பேசி உள்ளார்.
டீசண்டா ஸ்கூட்டில வந்த ஆன்டி.. என்ன செய்தாங்க தெரியுமா..? வெளியான சிசிடிவி காட்சி..!