நிப்பானியை பிடிக்கப்போவது யார்? காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி!

By SG Balan  |  First Published Apr 25, 2023, 4:17 PM IST

மகாராஷ்டாரா - கர்நாடகா இடையே எல்லை பிரச்சினை நிலவும் நிப்பானி தொகுதியில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.


நிப்பானி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜொல்லே சசிகலா அண்ணாசாகேப் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் காகாசாகேப் படேல் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. பெல்காம் மாவட்டத்தின் கீழ் வரும் நிப்பானி தொகுதியில் பல காலமாகவே பாஜக - காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி காணப்படுகிறது.

2018 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், நிப்பானி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஜொல்லே சசிகலா அண்ணாசாகேப், காங்கிரஸின் ககாசோ பாண்டுரங் பாட்டீலை தோற்கடித்து வெற்றி பெற்றார். நிப்பாணி சட்டமன்றத் தொகுதி, சிக்கோடி மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.

Tap to resize

Latest Videos

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், சிக்கோடி மக்களவை தொகுதியில் களமிறங்கிய பாஜக வேட்பாளர் அண்ணாசாகேப் சங்கர் ஜோல்லே, காங்கிரஸ் வேட்பாளர் பிரகாஷ் பாபன்னா ஹுக்கேரியை பின்னுக்குத் தள்ளி வெற்றியை வசப்படுத்தினார். இந்த முறை நிப்பானி சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் ராஜேஷ் அண்ணாசாகேப் பனவண்ணாவும் போட்டியிடுகிறார்.

2013ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் நிப்பானி சட்டமன்ற தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. 2008ஆம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் இத்தொகுதியை கைப்பற்றியது.

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே எல்லைப் பிரச்னை நீடித்துவரும் பகுதிகளில் நிப்பானியும் ஒன்று. நிப்பானி சட்டமன்றத் தொகுதியில் 2,09,099 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 1,06,134 ஆண்கள், 1,02,342 பெண்கள். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு மே 10 அன்று நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவு தெரியவரும்.

click me!