
டெல்லியில் இருந்து தோஹா சென்ற விமானத்தில் பயணம் செய்த நைஜீரியா பயணி உயிரிழந்ததை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லியிலிருந்து சென்ற விமானத்தின் பயணி ஒருவர் நடுவானில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து இன்று காலை கதார் நாட்டின் டோஹா நகருக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தில் பயணித்த நைஜீரியா நாட்டை சேர்ந்த 60 வயதான அப்துல்லா என்பவர் மயங்கி விழுந்துள்ளார்.
இதையும் படிங்க: 5 வருசம் ஆச்சு! சம்மதத்துடன் உடலுறவு கொண்டது பலாத்காரம் ஆகாது: உயர்நீதிமன்றம் கருத்து
இதை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மயங்கி விழுந்த பயணியை பரிசோதனை செய்த மருத்துவக்குழுவினர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, பிற பயணிகள் டோஹா செல்வதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகளுடன் இணைந்து இண்டிகோ நிறுவனம் மேற்கொண்டது.
இதையும் படிங்க: நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள மசூதியை அகற்றுங்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு
இது குறித்து இண்டிகோ நிறுவனம் கூறுகையில், டெல்லியில் இருந்து தோஹாவிற்கு செல்லும் இண்டிகோ விமானம் 6E-1736, மருத்துவ அவசரம் காரணமாக கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் புறப்பட்டவுடன் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது. இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த பயணி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து விமானம் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.