
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) பெரிய அளவில் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. காவலில் உள்ள பயங்கரவாதிகளின் வாக்குமூலங்கள், கைப்பேசிகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் அடிப்படையாக இந்த சோதனைகள் நடக்கின்றன.
சந்தேக நபர்கள்
ஹரியானாவின் நூஹ் பகுதியில் கைது செய்யப்பட்ட மருத்துவர்களில் ஒருவரின் மொபைலில் பல சந்தேகங்கள் உள்ளன மற்றும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அந்தத் தொடர்புகளை அடையாளம் காண என்ஐஏ தனிப்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மருத்துவர்களிடம் நீண்ட விசாரணை
முஸம்மில், ஆதில், ஷஹீனா உள்ளிட்ட மருத்துவர்களிடம் விசாரணை கடுமையாக நடந்து வருகிறது. குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட உமர் உள்ளிட்டோர் நூஹ் பகுதியில் பல முறை சென்றதாகவும், அங்கு முக்கிய கூட்டங்கள் நடந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.
வெடிபொருள் நிபுணர்
காவலில் உள்ள பயங்கரவாதிகள், உமர் நபி வெடிபொருள் தயாரிப்பில் நிபுணர் என்றும், வளாகத்திற்குள் தங்கி இருந்த வீட்டின் அருகே ஒரு சிறிய ஆய்வகத்தை உருவாக்கி சோதனை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வாடகை வீட்டில் ரகசிய தங்கும் திட்டம்
உமர் மற்றும் குழுவினர் நூஹ் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 10 நாட்கள் ரகசியமாக தங்கியிருந்ததாகவும், அந்த வீட்டின் வளாகத்தின் எலக்ட்ரீஷியன் ஏற்பாடு செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது அந்த எலக்ட்ரீஷியன் மற்றும் வீட்டின் உரிமையாளர் என்ஐஏ காவலில் உள்ளனர்.
துப்பாக்கி இன்னும் கிடைக்கவில்லை
குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தோட்டாக்கள், காலி உறைகள் கிடைத்தாலும், பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. காரில் 30 கிலோவுக்கு மேல் TATP என்ற மிக ஆபத்தான வெடிபொருள் வைக்கப்பட்டிருந்தது என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பொதுமக்களுக்கு திறப்பு
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த செங்கோட்டை, தற்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மீண்டும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட உள்ளது என்று இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.