கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு இன்னும் ரகசியமாக செயல்படுகிறது என்ற செய்தியைடுத்து, அதன் நிர்வாகிகள் வீடுகளில் 28 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை இன்று ரெய்டு நடத்தி வருகிறது
கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு இன்னும் ரகசியமாக செயல்படுகிறது என்ற செய்தியைடுத்து, அதன் நிர்வாகிகள் வீடுகளில் 28 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை இன்று ரெய்டு நடத்தி வருகிறது
இன்று அதிகாலை முதலே கேரளாவில் பாப்புலர் பிரண்ட்ஆப் இந்தியா அமைப்பின் 2-ம் நிலை நிர்வாகிகளுக்கு சொந்தமான வீடுகள், இடங்களில் என்ஐஏ தீவிரச் சோதனை நடத்தி வருகிறார்கள்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, வேறு பெயரில், அந்த அமைப்பில் உள்ள அதே நிர்வாகிகள் மீண்டும் இணைந்து செயல்படுகிறார்கள் என்ற செய்தியையடுத்து, அதிரடியாக என்ஐஏ இந்த சோதனையை நடத்திவருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிஎப்ஐ அமைப்பு ஈடுபட்ட குற்றங்கள் என்ன? பட்டியலிடும் மத்திய அரசு
பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள், ஐஎஸ்தீவிரவாத அமைப்புகளுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தது, தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியது போன்ற குற்றச்சாட்டுகள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது எழுந்தது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் என்ஐஏ, அமலாக்கப்பிரிவு இணைந்து நடத்திய ரெய்டுக்குப்பின் 5 ஆண்டுகளுக்கு அந்த அமைப்பைத் தடை செய்து மத்திய அரசு அறிவித்தது.
அந்த அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட சமி அமைப்பின் நிர்வாகிகளாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர்.
இந்நிலையில் பிஎப்ஐ அமைப்பில் உள்ள 2ம்நிலை நிர்வாகிகள், வேறுபெயரில் மீண்டும் இணைந்து செயல்படுகிறார்கள் என்ற தகவல் என்ஐஏவுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, கேரளாவில் 28 இடங்களில் இன்று அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக பிஎப்ஐஅமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
பிஎப்ஐ அமைப்பு, துணை அமைப்புகளுக்கு தடை ஏன்? மத்திய அரசின் 10 காரணங்கள்
கேரளாவில் எர்ணாகுளத்தில் 8 இடங்களிலும், திருவனந்தபுரத்தில் 6 இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். இன்று காலை 4 மணிக்குத் தொடங்கிய ரெய்டு தொடர்ந்து நடந்து வருகிறது
கேரள போலீஸார் பாதுகாப்புடன், என்ஐஏ அதிகாரிகள் இந்த ரெய்டில் ஈடுபட்டுள்ளனர். என்ஐஏ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் பல்வேறு கொலை வழக்குகளிலும் தொடர்புள்ளவர்கள். குறிப்பாக கேரளாவில் 2021, சஜித் கொலை வழக்கு, தமிழகத்தில் 2019ல் ராமலிங்கம் கொலைவழக்கு, 2021,ல் கேரளாவில் நந்து கொலை வழக்கு, 2018ல் கேரளாவில் அபிமன்பு கொலை, 2017ல் கேரளாவில் பிபின் கொலை, கர்நாடகாவில் 2017ல் சரத் கொலை, 2016ல் ஆர் ருத்ரேஷ் கொலை, 2016ல் பிரவீண் புயாரி கொலை, 2016ல் தமிழகத்தில் சசிகுமார் கொலை வழக்குகளில் பிஎப்ஐ அமைப்புக்குத் தொடர்பு உள்ளது.
பிஎப்ஐ அமைப்புக்கு துருக்கி, கத்தாரில் தொடர்பு, நிதியுதவி: அமலாக்கப்பிரிவு, ஏஎன்ஐ விசாரணை
பிஎப்ஐ அமைப்பின் நோக்கமே கொலைகள் செய்வது, கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொது அமைதியைக் குலைத்து, நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி, மக்கள் மனதில் அச்சத்தை புகுத்துவதுதான் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.