தீபாவளிக்கு மறுநாள் பொதுவிடுமுறை… தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் அறிவிப்பு!!

By Narendran SFirst Published Nov 3, 2021, 2:30 PM IST
Highlights

புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 5 ஆம் தேதி அரசு பொதுவிடுமுறை என்று புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நவம்பர் 13 ஆம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் இயங்கும் என்றும் புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. 

புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 5 ஆம் தேதி அரசு பொதுவிடுமுறை என்று புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை அடுத்து மக்கள் புத்தாடைகள் எடுத்தல், பட்டாசு வாங்குதல் போன்றவைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் வெளியூர்களில் வேலை செய்யும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இந்த நிலையில்  தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் அரசுக்கு வந்தன. இதை அடுத்து தீபாவளிக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்தது. இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 4 -தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக 5 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் அரசுக்கு வந்தன. அக்கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து தீபாவளிக்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அதனை ஈடு செய்யும் வகையில் அதனை ஈடு செய்யும் விதமாக மூன்றாம் சனிக்கிழமையான 20.11.2021 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு அடுத்த நாளை பொது விடுமுறையாக அறிவித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக தீபாவளி பண்டிகையின் மறுநாள் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து அவர், முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தீபாவளி பண்டிகையின் மறுநாளான 5ம் தேதி, தமிழகத்தில் அரசு விடுமுறை அறிவித்து, அந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில், வேறு நாளை அரசு பணி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை, புதுச்சேரியில் வசிக்கும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், தமிழகத்தை பின்பற்றி, தீபாவளிக்கு மறுநாள் 5ம் தேதி அனைத்து பிராந்தியங்களிலும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும என்றும் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 5 ஆம் தேதி அரசு பொதுவிடுமுறை என்று புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நவம்பர் 13 ஆம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர்ந்து ஆறு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து விடுமுறை புதுச்சேரி மாநில அரசு அறிவிப்பதால் அந்த மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த கொண்டாட்டத்தில் இந்த தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

click me!