இந்த முறை தப்பிச்சுருவாங்களா… நிர்பயா பலாத்கார வழக்கு குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்..!

By Asianet TamilFirst Published Jan 11, 2020, 6:31 PM IST
Highlights

இதில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.

நிர்பயா கூட்டுப்பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் 4 பேரில் 2 பேர் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளனர். சீராய்வு மனு என்பது உச்ச நீதிமன்றத்தில் நி்வாரணம் பெறும் கடைசி வாய்ப்பாகும். இந்த மனு நிராகரிக்கப்பட்டால்,அதன்பின் எங்கும் செல்ல முடியாது.கடந்த 2012-ம் ஆண்டு, டெல்லியில் 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார். அதன்பின் மீட்கப்பட்ட அந்த மாணவி, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். மாணவியைப் பலாத்காரம் செய்ததாக ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.


இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இதில் முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா ஆகிய 3 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், வழக்கில் 4-வது குற்றவாளியான அக்சய் குமார் சிங் கடந்த மாதம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்க உத்தரவிடக் கோரி நிர்பயாவின் தாய் ஆஷா தேவி டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஸ் குமார் அரோரா வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்குள் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டார், ேமலும் சட்டநிவாரணங்களை அடுத்து 14 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவித்தார் இந்த சூழலில் குற்றவாளிகளில் இருவர் முகேஷ் சிங், வினய் சர்மா இருவரும் உச்ச நீதிமன்றத்தில் தங்களின் தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரி சீராய்வு மனுவத் இன்று தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.நாரிமன், ஆர்.பாணுமதி , அசோக் பூஷன் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரும் 14-ம் தேதி பிற்பகல் 1.45 மணிக்கு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.

click me!