சமூக ஊடகமான ட்விட்டரில் 8.95 கோடி பின்தொடர்பவர்களுடன் பிரதமர் மோடி உலகின் மிகவும் பிரபலமான தலைவராக உள்ளார். ஆனால் அவரது பிரபலத்திற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் என்ன தெரியுமா?
உலகிலேயே இன்று பிரபலமான தலைவராக பிரதமர் மோடி இருப்பதற்கான காரணத்தை முஜீப் மஷால் நியூயார்க் டைம்ஸில் குறிப்பிட்டுளார். இதற்குக் காரணம் வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் என்று பதிவிட்டுள்ளார். இந்த ஊடகத்தால் எளிதில் பாமர மக்களுடனும் எளிதில் அணுக முடியும் என்ற விளக்கத்தையும் அளித்துள்ளார். சிறிய விஷயமோ, பெரிய விஷயமோ உலகில் இருக்கும் அனைத்து மக்களுடனும் இந்த ஊடகத்தில் மூலம் எளிதில் மக்களை சென்று சேர முடிகிறது. இந்த நிகழ்வில் ஒவ்வொரு முறையும் சில மாநிலங்களில் இருப்பவர்களின் திறன்களை புகழ்ந்து பேசுகிறார். எப்படி திட்டங்கள் மக்களுடன் இணைந்து இருக்கிறது என்று எளிதில் புரிய வைக்கிறார்.
பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி:
undefined
பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. மனதில் இருந்து என்பது விளக்கமாகிறது. இது உள்ளூர் முதல் தேசிய மற்றும் உலகளாவிய மக்களை இணைக்கிறது. பிரச்சனைகளுக்கு தீர்வுகளை தருவது மட்டுமின்றி மக்களை ஆன்மீக ரீதியிலும் இணைக்கிறது. பள்ளித் தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு வானொலி நிகழ்ச்சிகள் மூலம் அறிவுரைகளை வழங்குகிறார். கல்வியின் அவசியத்தையும் மக்களுக்கு எடுத்துரைக்கிறார்.
அவர் தண்ணீரின் முக்கியத்துவத்தை விளக்குகிறார், கிராம மக்கள் உட்பட வாழ்க்கையின் சவால்களைப் பற்றி பேசுகிறார். இந்த ரேடியோ காட்சிகள் அவரது கட்சியின் சமூக ஊடகப் பக்கங்களில் இடம்பெறும். அங்கு மக்கள் மன் கி பாத்தின் முக்கிய விஷயங்களை உரை மற்றும் வீடியோவுடன் புரிந்து கொள்கிறார்கள்.
பிரதமர் மோடிக்கு ஏன் இவ்வளவு செல்வாக்கு?
பிரதமர் மோடியின் புகழ், அவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் என்பதில் மட்டும் இல்லை. மேலும், பல உலக நாடுகளுக்கு சென்று வருகிறார் என்பதில் இல்லை. அவர் இந்தியாவை நன்றாக புரிந்து வைத்து இருக்கிறார். மன் கி பாத் நிகழ்வு மூலம் மக்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். ஒவ்வொரு மாதமும் பிரதமர் மோடி வானொலி நிகழ்ச்சிக்காக அரசு பங்களாவில் உள்ள ஸ்டுடியோவுக்கு வந்து செல்கிறார். எனது அன்பான நாட்டுமக்களே, வணக்கம் என்று அவர் தனது உரையைத் தொடங்குகிறார். உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி சுமார் 30 நிமிடங்கள் உரையாற்றுகிறார். நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்படும் நபரிடம் நேரடியாக பேசுகிறார். அவர்களது வீட்டுக்கு வரலாமா என்று கேட்கிறார். அந்த ஊரின் சிறப்புகளை கேட்டறிகிறார். ஒரு ஆசிரியர் போன்று அறிவுரை வழங்குகிறார்.
மாபெரும் வெற்றிக்கண்ட மன் கி பாத்தின் 100வது எபிசோட்… டிவிட்டரில் டிரண்டாகி முதலிடம்!!
டிஜிட்டல் மீடியா:
டிஜிட்டல் மீடியாவில் அவர் ஏற்படுத்தும் தாக்கம் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. தங்கள் அரசாங்கத்தின் பிரபலமான திட்டங்களைப் பற்றிய தகவல்களை மக்கள் முன் வைக்கிறார்கள். இலவச ரேஷன் விநியோகம் முதல் உள்கட்டமைப்பு மேம்பாடு வரையிலான பேச்சுக்கள் வைரலாகின்றன. அவர் தனது சர்வதேச சுற்றுப்பயணங்கள் குறித்து இந்திய மக்களுடன் பேசுகிறார். ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை, குழாய் தண்ணீர் உள்ளிட்ட அரசுப் பணிகள் குறித்து எப்போதும் பேசுகிறார். இவரது பேச்சுக்களை வெட்டி வீடியோவாக சமூக வலைதளங்களில், கட்சியின் சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்.
டெல்லி ஆர்ட் கேலரியில் ஜன சக்தி கண்காட்சி! மன் கீ பாத் உரைகளைக் ஓவியமாக்கிய கலைஞர்கள்!
அடிப்படை தேவைகள்:
பிரதமர் மோடி வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் அதிக கவனம் செலுத்துவதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது. தண்ணீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுடன், எவ்வாறு சேமிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். ஒரு தொலைதூர கிராமப்புற பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான நிலத்தடி நீர் தொட்டி உள்ளது. அதன் நீர் தேவைகளை பூர்த்தி செய்ய மழைநீரால் ரீசார்ஜ் செய்யப்படுகிறது என்பதை அவர் எடுத்துரைக்கிறார்.
இளைஞர்கள் குறித்து பேசுகிறார்:
பிரதமர் மோடி தனது மன் கி பாத் நிக:ழ்ச்சியில் இளைஞர்களைப் பற்றி நிச்சயம் பேசுவார். இது அவருடைய வழக்கமான தலைப்பு. தேர்வின்போது இருக்கும் மன அழுத்தம் குறித்து பேசுவார். உங்களுக்கு நான் தேர்வில் வழிகாட்டியாக இருக்க முடியாது. ஏன் என்றால் நானே ஒரு சராசரி மாணவனாகத்தான் இருந்தேன் என்று கூறுவார். ஆனால் ஒவ்வொரு பிரச்சனையிலும் உங்களுடன் இருப்பேன் என்பார். கொரோனா தொற்றுகாலத்தில் அரசு திட்டத்தின் மூலம் தடுப்பூசி போடுவதற்கு மக்களை பிரதமர் மோடி ஊக்கப்படுத்தினார். இதெல்லாம்தான் மோடியை பிரபலமாக்கி இருக்கிறது என்று முஜீப் மஷால் குறிப்பிட்டுள்ளார்.