சாமானிய மக்களுக்கு சுமை கொடுக்க மாட்டோம்... புதியமோட்டார் வாகனச் சட்டத்துக்கு நோ சொன்ன மம்தா பானர்ஜி..!

By Asianet TamilFirst Published Sep 12, 2019, 10:34 AM IST
Highlights

சாமானிய மக்களை நோகடிக்கும் வகையில் கடும் அபராதத்தை விதிக்க மாட்டோம், புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சாமானிய மக்களை நோகடிக்கும் வகையில் கடும் அபராதத்தை விதிக்க மாட்டோம், புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

விபத்தைக்குறைக்கும் வகையிலும், உயிர்பலி நிகழ்வதைத் தடுக்கும் வகையிலும் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. செப்டம்பர் 1-ம்தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ள சட்டத்தின் கீழ் சாமானிய மக்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படுகிறது.

 

இந்த புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த பல்வேறு மாநிலங்கள் தயக்கம் காட்டுகின்றன. குஜராத் மாநிலத்தில்கூட இந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்தவில்லை.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ மேற்கு வங்கத்தில் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம். சமானிய மக்களுக்கு கூடுதல் சுமையை நாங்கள் தரமாட்டோம். புதிய மோட்டார் வாகனச் சட்டம் மிகக் கடுமையானது. அதற்கு பதிலாக நாங்கள் பாதுகாப்பான போக்குவரத்து விதிகள் திட்டத்தை செயல்படுத்துவோம். விபத்துக்களை குறைப்பதற்கான முயற்சிகளை எடுப்போம். ஆனால்,மோட்டார் வாகனச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, சாமானிய மக்களை துன்பப்படுத்தமாட்டோம்.

புதிய மோட்டார் வாகனச் சட்டம் என்பது கூட்டாட்சி முறையில் தலையிடுவது போன்றதாகும். இந்த சட்டத்தில் உள்ள கொடிய அபராதங்களை மனிதநேயத்துடன் களைய வேண்டும். தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவுகள் மக்களை கடுமையாக பாதிக்கும். 500 ரூபாய் அபராதம் விதிப்பதற்கு பதிலாக விதிகளை மீறினால் ரூ.10 ஆயிரம் விதிக்கப்படுகிறது. ஏழை மக்கள், இந்த அபராதத்தை எவ்வாறு அவர்கள் செலுத்துவார்கள் , பணத்துக்கு அவர்கள் எங்கு செல்வார்கள். ஆதலால் இந்த பிரச்னையை மனிதநேயத்துடன் அணுக வேண்டும்” எனத் தெரிவித்தார்.

click me!