புதிய நாடாளுமன்றத்தை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி நாளை காலை திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்கவேண்டும். அவருக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து 20 எதிர்க்கட்சிகள் இந்த விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன.
புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் 888 பேரும், மாநிலங்களவையில் 300 பேரும் அமரலாம். இதுவே பழைய நாடாளுமன்றத்தில் 543, மாநிலங்களவையில் 250 பேர் அமரும் வகையில் இருந்தது. இந்த புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு கடந்த 2020, டிசம்பர்10 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இருந்தார்.
செங்கோலை ஒப்படைத்த ஆதீனங்களிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி
புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா அட்டவணை:
காலை 7.15: பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு வருகிறார்
காலை 7.30: சடங்கு, ஹோமம் வளர்த்தல் என பூஜை துவக்கம். சுமார் ஒரு மணி நேரம் தொடரும்.
காலை 8.30: மக்களவைக்கு பிரதமர் வருகை.
காலை 9.00: சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் ‘செங்கோல்’ நிறுவப்படுகிறது
காலை 9.30: பிரார்த்தனை நிகழ்ச்சி முடிந்ததும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பிரதமர் மோடி வெளியேறுகிறார்
தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் செங்கோல்: பிரதமருக்கு ரஜினிகாந்த் நன்றி
பகுதி 2:
காலை 11.30: விருந்தினர்கள் வருகை.
நண்பகல் 12.00: பிரதமர் நரேந்திர மோடி வருகை. தேசிய கீதத்துடன் விழா தொடங்குகிறது.
நண்பகல் 12.10: ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இருவரிடம் இருந்து வரும் உரையை ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் வாசிப்பார்
நண்பகல் 12.17: இரண்டு குறும் ஆவணப்படங்கள் திரையிடல்.
நண்பகல் 12.38: ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் உரை (கலந்துகொள்ள வாய்ப்பில்லை). மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உரை.
பிற்பகல் 1.05: ரூபாய் 75 நாணயம் மற்றும் நினைவு முத்திரையை பிரதமர் வெளியிடுகிறார்.
பிற்பகல் 1.10: பிரதமர் நரேந்திர மோடியின் உரை.
பிற்பகல் 2.00: விழா நிறைவடைகிறது.