"நாளை முதல் ஏ.டி.எம்.களில் ரூ.2000, 500 நோட்டு...!!! மத்திய அரசு தீவிர ஆலோசனை... அனைத்து ஏற்பாடுகளும் தயார்

First Published Nov 15, 2016, 3:26 AM IST
Highlights


நாடு முழுவதும், நாளை முதல் ஏ.டி.எம்.களில் ரூ.2000 நோட்டுகள் மக்களுக்கு கிடைக்கும் என மத்திய அ ரசு தெரிவித்துள்ளது.

இது வரை ஏ.டி.எம்.களில் அதிகபட்சமாக ரூ. 100 மட்டுமே எடுத்த வந்த நிலையில் நாளை முதல் ரூ. 2 ஆயிரம்  நோட்டு கிடைக்க மத்திய அரச முடிவெடுத்து, பொருளாதார விவகாரத்துறையுடன் ஆலோசித்துள்ளது.அதற்கான ஏ.டி.எம்.களை சரிசெய்யும் பணிகளும் தொடங்கிவிட்டன.  

பிரதமர் மோடி நாடுமுழுவதும ரூ. 1000, ரூ.500 நோட்டுக்களை கடந்த 8 ந்தேதி செல்லாது என அறிவித்தார். 10-ந்தேதி முதல் மக்கள் தங்களிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுக்களை வங்கிகள், தபால்நிலையங்களில் கொடுத்து, மாற்றி வருகின்றனர்.

ஏ.டி.எம். நிலையங்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கிவிட்டபோதிலும், அதில் ரூ. 100 நோட்டுக்களைத் தவிர இல்லை. மேலும், ரூபாய் நிரப்பப்பட்ட சில மணிநேரங்ளில், மக்களின் தேவை காரணமாக ஏ.டி.எம்.களில் பணம் தீர்ந்து விடுகிறது. 

இந்நிலையில் பணத்துக்காக மக்கள் கடந்த 2 நாட்களாக வங்கிகள், தபால்நிலையங்களின் வாசல்களில் காத்திருக்கின்றனர். 

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம்  டெல்லியில் இன்று காலை நடந்தது.

இந்த கூட்டத்தில் அனைத்து ஏ.டி. எம.களிலும் நாளை முதல் ரூ.2000, ரூ.500 நோட்டுகளை நிரப்பி மக்கள் எடுத்துக்கொள்ளும் வசதியை செயல்படுத்த மத்திய அரசு  பொருளாதார விவகாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளது. இதற்கான ஏ.டி.எம்.களை சரி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

மேலும், இன்றுமுதல்  வர்த்தகம் செய்யும் தனிநபர் ஒருவர் , வாரத்துக்கு நடப்புக்கணக்கில் ரூ. 50 ஆயிரம் வகை பணம் எடுத்துக்கொள்வது, அரசு துறை அமைப்புகள் இனி இணையவழி பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டடுள்ளது. 

டெபிட் கார்டு, மற்றும் கிரெட்டி கார்டு மூலம் பணம் எடுத்துக்கொள்ளும் வகையில் மைக்ரோ ஏ.டி.எம். களை நிறுவவும் அரசு முடிவு செய்துள்ளது என பொருளாதார விவகாரத்துறை தெரிவித்துள்ளது.

click me!