“இனி ATM-களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்” - சக்திகாந்த தாஸ்

First Published Nov 15, 2016, 3:15 AM IST
Highlights


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதை அடுத்து, பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றி புதிய பணத்தை பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து வங்கிகளிலும் ஏடிஎம் களிலும் சரியாக பணம் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.

இதனால் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியின் உத்தரவின்பேரில், பிரதமரின் தலைமை செயலாளர் ரூபேந்திர மிஸ்ரா தலைமையில் வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பணத்தை நிரப்புவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், டெல்லியில் இன்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, மக்களுக்கு எளிதில் பணம் கிடைக்க அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது என தெரிவித்தார்.

நாளை முதல் பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கில் ரூ.10,000 வரை எடுப்பதாக கூறப்பட்ட உத்தரவு தற்போது தளர்த்தப்பட்டு ரூ.50,000 வரை எடுக்கலாம்

ஒருவர் ஏடிஎம்மில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. இனி ஒருவர் ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் என தெரிவித்தார்.

மேலும், ஏடிஎம்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை எடுக்கும் வகையில் தொழில்நுட்பத்தை மாற்றியுள்ளதாக தெரிவித்த அவர், ஓரிரு நாட்களில் அனைத்து ஏடிகம்களில் இருந்தும் 2000 ரூபாயை எடுக்கலாம் என தெரிவித்தார்.  

click me!