தாஜ்மஹாலைப் பார்வையிட புதிய கட்டுப்பாடாம்...!

Asianet News Tamil  
Published : Jan 03, 2018, 11:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
தாஜ்மஹாலைப் பார்வையிட புதிய கட்டுப்பாடாம்...!

சுருக்கம்

New control to visit Taj Mahal!

முகலாய மன்னன் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ்-க்கு கட்டிய தாஜ்மாகாலை பார்வையிடும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மயால், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு காதலின் சின்னமாக பார்க்கப்படுகிறது. 

தாஜ்மஹால், கட்டடக்கலையின் சிறந்த படைப்பாக பார்க்கப்படுகிறது. தாஜ்மகாலைக் காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர்.

இந்தியாவின் அடையாளங்களுள் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிடும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இதன்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே தாஜ்மகாலின் அழகை ரசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இதற்காக 40 ஆயிரம் டிக்கெட்டுகளுடன் முன்பதிவு நிறுத்தப்படுகிறது.

தாஜ்மகாலை பராமரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 20 ஆம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. ஆனால், வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து.. 2 பெட்டிகள் எரிந்து நாசம்.. அலறிய 158 பயணிகளின் நிலை என்ன?
ஒரு சிகரெட் 72 ரூபாய்! அதிரடி வரி உயர்வு மசோதா.. புகைபிடிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஷாக்!