கூடுதலாக புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு….3 வாரங்களில் நிலைமை சீராகும்…..

First Published Dec 16, 2016, 6:08 AM IST
Highlights


கூடுதலாக புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு….3 வாரங்களில் நிலைமை சீராகும்…..

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு பொதுமக்களிடையே பண புழக்கம் குறைந்துவிட்டது.2000 ரூபாய்க்காக ஏடிஎம்கள் முன்பு மணிக்கணக்கில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை எப்போது மாறும் என்பது குறித்து மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாசிடம் கேட்டபோது,
காலாவதியான நோட்டுகளை மாற்ற புதிய 2000 ரூபாய் நோட்டுகளை முதலில் அச்சடித்தோம். தற்போது புதிய 500 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் அச்சடித்து வருகிறோம். என தெரிவித்தார்.

மத்திய அரசு.  ரிசர்வ் வங்கி, அமலாக்கத் துறை  மற்றும் சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுத்து வருகிற நிலையில், அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் ரொக்க பண புழக்க நிலைமை சீராகும் எனத் தெரிவித்தார்

கிராமப்புறங்களில் பணப்புழக்கத்தை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் ,கிராமங்களுக்கு அதிக அளவில் புதிய ரூபாய் நோட்டுகள் அனுப்பப்பட்டு வருவதாகவும் சக்தி கந்த தாஸ் தெரிவித்தார்.

click me!