நீலப் பச்சை வண்ணத்தில் புதிய 50 ரூபாய் நோட்டு ரெடி... விரைவில் வௌியிடுகிறது ரிசர்வ் வங்கி!!

First Published Aug 18, 2017, 2:54 PM IST
Highlights
new 50 rupees is ready to distribute


வௌிர்நீலத்தில் புதிய 50 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதால், விரைவில் புழக்கத்துக்கு ரிசர்வ் வங்கி வௌியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாய் நோட்டு தடைகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட ரூ. 500, ரூ.1000 நோட்டுகள் தடை செய்யப்பட்டன. அதன்பின், புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. மேலும், ரூ.20 , ரூ50 நோட்டுகளையும் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்து இருந்தது.

அந்த ரூபாய் நோட்டுகளில் உள்ள வரிசை எண்கள் ஏறுவரிசையிலும், இன்டாலிகோ அச்சு இல்லாமல் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது. ஏறக்குறைய 8 மாதங்களுக்கு பின் அந்த புதிய 50 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கபட்டுள்ள படம் சமூக ஊடகங்களில் வௌியாகியுள்ளன.

இந்த புதிய 50 ரூபாய் நோட்டு நீலப்பச்சை நிறத்தில், பழைய 50 ரூபாய் நோட்டுகளைக் காட்டிலும் வேறுபட்டதாக இருக்கிறது. மகாத்மா காந்தி உருவம் பதிக்கப்பட்டும், தற்போதுள்ள ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கையொப்பம் இடப்பட்டுள்ளது. இன்சட் லெட்டர் இல்லாமல், வரிசை எண்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

ரூபாய் நோட்டின் பின்புறத்தில் அச்சடிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டு இருக்கும்.  மேலும், இந்த புதிய 50 ரூபாய் நோட்டில் தென் இந்திய கோயிலின் உருவம் ஒன்றும்  அச்சடிக்கப்பட்டுள்ளது.

இந்த ரூபாய் நோட்டுகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், வடிவம் ஆகியவை அனைத்து தற்போது இருக்கும் நோட்டுகளைப் போல இருக்கும் என்று கடந்த டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

click me!