வெளியானது நீட் தேர்வுக்கான தேதி..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு...! 

First Published Feb 8, 2018, 5:43 PM IST
Highlights
neet exam date is announcement


மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு வரும் மே 6 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

ஆனால், தேசிய அளவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளதோடு விலக்கு அளிக்க முடியாது என வெளிப்படையாக தெரிவித்தும் விட்டது.

இதையடுத்து கடந்த முறையை போல தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மாணவர்களுக்கு அரசு சார்பில் நீட் தேர்விற்கு பயிற்சியளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வரும் கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ ஏற்கனவே அறிவித்திருந்தது. 

நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும். அதேபோல் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் நீட் தேர்வு வினாத்தாள் கொடுக்கப்படும். நீட் தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 180 கேள்விகள் மட்டுமே இடம்பெறும் என உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், வரும் மே 6 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நீட் தேவுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆன் லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

மேலும் வரும் மார்ச் 9 ஆம் தேதியே கடைசி நாள் எனவும் குறிப்பிட்டுள்ளது. 
 


 

click me!