
மருத்துவ அறிவியலுக்கான தேசியத் தேர்வு வாரியம் நீட் முதுகலைத் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. நீட் முதுகலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது. சுமார் 2,42,678 மாணவர்கள் நீட் முதுகலைத் தேர்வை எழுத உள்ளனர்.
ஒரே ஷிப்டில் நீட் முதுகலை தேர்வு?
நீட் முதுகலைத் தேர்வை இரண்டு கட்டமாக நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், இதற்கு உச்சநீதிமன்றம் செக் வைத்தது. அதாவது ஒரே ஷிஃப்ட்டில் நீட் முதுகலைத் தேர்வை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி நீட் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த வேண்டிய நிலைக்கு மருத்துவ தேர்வு வாரியம் தள்ளப்பட்டுள்ளது.
நீட் தேர்வு நகரச் சீட்டு
இந்நிலையில், தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS), நீட் தேர்வு நகரச் சீட்டை இன்று ஜூன் 2 ஆம் தேதி வெளியிட உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் உள்நுழைவுச் சான்றுகள் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி nbe.edu.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து தேர்வு நகரச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம். நீட் முதுகலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஜூன் 11, 2025 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் ஜூலை 15, 2025 அன்று அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
NEET PG தேர்வு நகரச் சீட்டு 2025 பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்:
1.nbe.edu.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்
2.முகப்புப் பக்கத்தில், NEET PG 2025 தாவலைக் கிளிக் செய்யவும்
3.உங்கள் உள்நுழைவுச் சான்றுகள் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி போர்ட்டலில் உள்நுழையவும்
4.தேர்வு நகரச் சீட்டைச் சரிபார்த்து பதிவிறக்கவும்
5.எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்