
சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த டவுன்ஸ்ட்ரீம் எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனமான நயாரா எனர்ஜி, வரும் இந்தியா H.O.G. பேரணி 2025 நிகழ்வில் அதிகாரபூர்வ எரிபொருள் பங்குதாரராக இணைந்துள்ளது.
டிசம்பர் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் கோவாவில் நடைபெற உள்ள இந்த பிரத்யேக அழைப்புடன் கூடிய பேரணி, asianetnews.com வழங்க உள்ளது. ஹார்லி டேவிட்சன் சுதந்திர கலாசாரம் மற்றும் சகோதரத்துவ உறவு கொண்டாட்டமாகவும், நாடு முழுவதும் பயணிக்கும் ஹார்லி சவாரி உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சியாகவும் இது நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி எபிசென்டர் H.O.G. சாப்டர் (நாக்பூர்) மற்றும் Iron Ore H.O.G. சாப்டர் (ராய்ப்பூர்) ஆகியவற்றால் வழங்கப்படுகிறது.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஒற்றை-தள சுத்திகரிப்பு நிலையத்தையும், 6,500-க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களையும் இயக்கும் நயாரா எனர்ஜி, நாட்டின் மொத்த சுத்திகரிப்பு திறனில் சுமார் 8%, ரீட்டெயில் எரிபொருள் விற்பனையில் 7%, மற்றும் பாலிப்ரொப்பிலீன் உற்பத்தியில் 8% பங்கைக் கொண்டுள்ளது. asianetnews.com மற்றும் இந்தியா H.O.G. பேரணி அமைப்புடன் நிறுவனத்தின் இணைப்பு, ஆர்வம், திறன், முன்னேற்றம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள ஒரு பிரத்யேக சங்கமமாக பார்க்கப்படுகிறது.
பேரணியின் உற்சாகமும் ஆற்றலும், உயர்தர எரிபொருள் வழங்கும் நிறுவனத்தின் வாக்குறுதியை வெளிப்படுத்தும் பக்கமாக அமைந்துள்ளது. இந்தியா H.O.G. பேரணியில் நாட்டின் அழகான பாதைகளில் சவாரி அனுபவங்களும், அதன் நிறைவாக நேரடி இசை நிகழ்ச்சிகள், முன்னணி கலைஞர்களின் நிகழ்வுகள், H.O.G. உறுப்பினர்களுடன் சந்திப்பு, மற்றும் ஆண்டு பரிசளிப்பு விழா உள்ளிட்ட பல சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
ஹார்லி-டேவிட்சன் உறுப்பினர்களுக்கான பதிவு தற்போது அதிகாரப்பூர்வ இந்தியா H.O.G. பேரணி இணையதளத்தில் திறக்கப்பட்டுள்ளது. India H.O.G.™️ Rally website