முதல்வர்னா இப்படி இருக்கனும் - 173 நாட்களில் அணை கட்டி சாதனை செய்த சந்திரபாபு நாயுடு

 
Published : Mar 26, 2017, 09:35 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
முதல்வர்னா இப்படி இருக்கனும் - 173 நாட்களில் அணை கட்டி சாதனை செய்த சந்திரபாபு நாயுடு

சுருக்கம்

Mutalvarna be like building a dam in the record of 173 days in the Chandrababu Naidu

ஆந்திரா மாநிலத்தில் 173 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட பட்டி சீமா அணைக்கட்டு, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது.

ஆந்திராவின் ராயலசீமா பிராந்திய மாவட்டங்களில் வறட்சியைப் போக்குவதற்காக முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்

கோதாவரி நதியையும், கிருஷ்ணா நதியையும் இணைக்கும் முயற்சியில் வெற்றி கண்ட அவர், கோதாவரி நதியிலிருந்து சுமார் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்கவும் முயற்சி மேற்கொண்டார்.

இதன் அடிப்படையில் கோதாவரி மாவட்டத்தில் ‘பட்டிசீமா’ அணைக்கட்டை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்தது. இதன்படி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கிய இந்த அணையின் கட்டுமானப் பணி, வெறும் 173 நாட்களில் முடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து போலாவரம் அணை கட்டி முடிக்கப்பட்ட பின்னர், ஆந்திராவிலேயே மிகவும் வறண்ட பகுதியாகக் கருதப்படும் ராயல சீமாவுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

இதனிடையே, மிகக்குறைவான காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட அணையாக, பட்டிசீமா லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த தகவலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சமூக வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!
தேர்வு மையமாக மாறிய விமான ஓடுதளம்! 187 காலி இடங்களுக்கு 8000 பேர் போட்டி! பட்டதாரிகளின் பரிதாப நிலை!