
இதே வேகத்தில் முஸ்லீம் மக்கள் தொகை உயர்ந்தால் 2027-ம் ஆண்டு இந்தியா முஸ்லீம் நாடாகிவிடும் என இந்து யுவா வாஹினி அமைப்பின் மூத்த தலைவரான நாகேந்திர பிரதாப் தோமர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதாப் தோமர், இந்தியாவை முஸ்லீம் நாடாக மாற்ற முஸ்லீம்கள் சதி செய்வதாக தெரிவித்துள்ளார்.
தற்போது இருக்கும் இதே வேகத்தில் முஸ்லீம் மக்கள் தொகை உயர்ந்தால், 2027-ம் ஆண்டில் இந்தியா முஸ்லீம்களின் நாடாகிவிடும் என பேசியிருக்கிறார்.
முஸ்லீம்கள், குழந்தைகள் வேண்டும் என்பதைவிட அதிக மக்கள் தொகையை பெற்று இந்தியாவை ஆக்கிரமிப்பதற்காகவே அதிக குழந்தைகளை பெறுகின்றனர் என தோமர் பேசியிருக்கிறார்.
இந்து யுவா வாஹினி என்ற இந்து அமைப்பு, தற்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் 2002-ல் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.