
மும்பையில் பரேல் பகுதியில் உள்ள கிறிஸ்டல் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கிறிஸ்டல் டவரின் 12-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீயை அணைக்கும் பணியில் 20 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், குடியிருப்பிற்குள் சிக்கியவர்களை பெரும் சிரமப்பட்டு ராட்சத கிரேன் மூலம் மீட்டனர். பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மூச்சுத்திணறல் மற்றும் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சுமார் 20 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியது தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், தீ விபத்து ஏற்பட்ட கட்டடம் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி கட்டடத்திற்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.