இருசக்கர வாகனம் விபத்து... தூக்கி வீசப்பட்ட பெற்றோர்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை!

Published : Aug 22, 2018, 02:35 PM ISTUpdated : Sep 09, 2018, 07:39 PM IST
இருசக்கர வாகனம் விபத்து... தூக்கி வீசப்பட்ட பெற்றோர்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை!

சுருக்கம்

பெங்களூருவில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தம்பதி பரமேஸ்வர்-மனைவி ரேணுகா ஆகியோர் தங்களது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

பெங்களூருவில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பரமேஸ்வர்-மனைவி ரேணுகா என்ற தம்பதி ஆகியோர் தங்களது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் எதிரே மாற்றொரு இருசக்கர வாகனம் வந்தது. எதிர்பாராத விதமாக இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. 

இதில் தம்பதியினர் இருவரும் ரோட்டில் விழுந்து காயமடைந்தனர். ஆனால் அந்த இருசக்கர வாகனத்தில் அவரது குழந்தை இருந்தது. இருசக்கர வாகனம் நிற்காமல் நடுரோட்டில் அரை கிலோமீட்டர் தூரம் ஓடியது. பின்னர் ஒரு திருப்பத்தில் அந்த மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. 

இதில் அந்த குழந்தை ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பில் கீழே விழுந்தது. அப்போது அந்த தேசிய நெடுஞ்சாலையில் கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்றாலும் அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதவில்லை, குழந்தை தூக்கி வீசப்பட்ட நேரத்திலும் அந்த குழந்தை மீதும் எந்த வாகனங்களும் மோதவில்லை என்பது வியப்புக்குரியது. 

அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் குழந்தையை மீட்டனர். ஆனால் குழந்தைக்கு எந்தவித காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இருசக்கர வாகனத்தில் விழுந்த கணவன்-மனைவி இருவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

PREV
click me!

Recommended Stories

நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்
அஸ்ஸாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற காங்கிரஸ் சதி செய்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு