
மும்பை தாதா ஹாஜி மஸ்தான் மிர்சாவின் வளர்ப்பு மகன் நடிகர் ரஜினிகாந்திற்குமிரட்டல் விடுத்தது சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஹாஜி மஸ்தான் மிர்சாவின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் நடிகர்ரஜினிகாந்துக்கு அனுப்பியுள்ள மிரட்டல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது-
நான் மும்பையின் மறைந்த ஹாஜி அலி மஸ்தான் மிர்சாவின் வளர்ப்பு மகன் . இவரை உலகம் முழுவதும் பலருக்கு தெரியும். ‘பாரதிய மைனாரிட்டி சுரக் ஷாமாகாசங்’ கட்சியையும் நிறுவியவர்.
இயக்குநர் ரஞ்சித்துடன் இணைந்து நீங்கள், என் வளர்ப்பு தந்தை மஸ்தான்மிர்சாவின் வாழ்க்கையை படமாக எடுக்கப்போகிறீர்கள் என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா, தமிழ் டைம்ஸ் நாளேடுகள் வாயிலாக அறிந்தேன்.
அதில் அனைவரும் அறிந்த அரசியல் தலைவருமான எனது தந்தையையுமானமஸ்தான் மிர்சாவை, கடத்தல்காரர் போன்றும், தாதா போலவும் சித்தரிக்க உள்ளீர்கள் என்பதை அறிந்தேன். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய வளர்ப்புத்தந்தை ஒருபோதும் எந்த வழக்கிலும் சிக்கவில்லை, எந்தவிதமான கடத்தல் செயலிலும் ஈடுபடவில்லை, நீதிமன்றத்தால் தண்டனையும் அவருக்கு விதிக்கப்படவில்லை. இந்நிலையில், அவரை தவறாக சித்தரிப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும்.
நாம் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். என்னை எனது வளர்ப்புத்தந்தை சிறுவயதில் இருந்து வளர்த்துள்ளார். ஆனால், ஒருபோதும், என்னை முஸ்லிம் மதத்துக்கு மாற்ற முயற்சிக்கவில்லை, கூறவும் இல்லை. அவருடன் அனைத்து இடத்துக்கும் சென்று இருக்கிறேன், உடன் ெநருக்கமாகஇருந்து இருக்கிறேன். அவரைப் பற்றி நான் நன்கு அறிந்தவன்.
நீங்கள் எனது வளர்ப்புத் தந்தையைப் பற்றி படம் எடுக்க விரும்பினால், அவரின் உண்மை வாழ்க்கை வரலாற்றை நான் வழங்குகிறேன். அவரின் வாழ்க்கையை படமாக எடுக்க நான் ஆவலாக இருக்கிறேன், அதை தயாரிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன்.
ஹாஜி மஸ்தான் மிர்சாவுக்கு மிகப்பெரிய பின்புலம் இருக்கிறது, அவரின் தொண்டர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். இந்நிலையில், அவர் குறித்து தவறாக சித்தரித்து படம் எடுத்தால் அவரின் தொண்டர்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டியது இருக்கும், கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். சட்டரீதியான நடவடிக்கைகளையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
ஹாஜி அலி மஸ்தான் மகன், நடிகர் ரஜினிகாந்துக்கு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.