அதிவேக புதிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் தீபாவளி பண்டிக்கைக்குள் அறிமுகம் !

First Published Sep 19, 2017, 2:57 PM IST
Highlights
Mumbai Delhi route may soon get new faster Rajdhani Express train


டெல்லி - மும்பை நகரங்களுக்கு இடையே புதிய, அதிவேக ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலைதீபாவளிப் பண்டிகைக்குள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பாதையில் அறிமுகப்படுத்தப்படும் 3-வது ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இதுவாகும். வழக்கமாக இயக்கப்பட்டுவரும் இரு ராஜ்தானி ரெயில்கள் 15 மணிநேரத்துக்கும் அதிகமான பயண நேரத்தை எடுத்துக்கொள்ளும் நிலையில், புதிய ராஜ்தானி ரெயில் 13 மணி நேரத்தில் செல்லும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை-டெல்லி இடையே தற்போது, ஆகஸ்ட் கிராந்த் ராஜ்தானி, மும்பை சென்ட்ரல்- புதுடெல்லி ராஜ்தானி ஆகிய இரு ராஜ்தானி ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இருரெயில்களும் மும்பை-டெல்லி இடையிலான 1,377 கி.மீ தொலைவைக் கடக்க 15 மணி நேரத்துக்கு அதிகமாக எடுத்துக்கொள்கின்றன.

இதில் ஆகஸ்ட் கிராந்தி ராஜ்தானி சராசரியாக மணிக்கு 80கி.மீ வேகக்தில் மட்டுமே இயக்கப்படுவதால்,  17 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. 89  கி.மீ வேகத்தில் இயக்கப்படும்மும்பை சென்ட்ரல்- புதுடெல்லி ராஜ்தானி 15 மணிநேரம், 35 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.

இந்நிலையில், தீபாவளிப் பண்டிகைக்குள், 14 நவீன பெட்டிகள் கொண்ட புதிய, அதிவேகராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலை அறிமுகம் செய்ய ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ரெயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இந்த புதிய ரெயிலின்சோதனை ஓட்டம் அடுத்த சில நாட்களில் தொடங்கும். மும்பை-ராஜ்தானி இடையே 24 பெட்டிகளுடன் 2 எஞ்சின்கள் மூலம் இயக்கப்பட உள்ளது. இந்த பெட்டிகள் அனைத்தும் நவீனலிங்கே ஹோப்மான் பஸ்ச் ரக பெட்டிகளாகும். நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பெட்டிகளால் தடம் புரளும் வாய்ப்புகள் மிகக் குறைவாகும். அதிகதிறன் கொண்ட பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய ரெயிலின் வேகம் மணிக்கு 130 கி.மீ வேகம் வரை இயக்கப்படும். ஆனால், ஏராளமான வளைவுகள் இருப்பதால், அதிகபட்சமாக 95 கி.மீ வரை இயக்கப்படும். ஆனால், படிப்படியாக இந்த ரெயிலின் வேகம் அதிகரிக்கப்படும்’’ என்றார்.

click me!