அடேங்கப்பா! ஒரு வி.ஐ.பி 3 போலீசார், 663 மக்களுக்கு ஒரு போலீஸ்காரர்தானாம்...

Asianet News Tamil  
Published : Sep 19, 2017, 12:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
அடேங்கப்பா! ஒரு வி.ஐ.பி 3 போலீசார், 663 மக்களுக்கு ஒரு போலீஸ்காரர்தானாம்...

சுருக்கம்

3 cops to protect each VIP 1 for 663 common people

நாட்டில் ஒவ்வொரு வி.ஐ.பி.க்கும் பாதுகாப்பு அளிக்க 3 போலீசார் பணியில் இருந்து வருகிறார்கள், ஆனால், சாமானிய மக்கள் 663 பேருக்கு ஒரு போலீஸ்காரர் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருக்கிறார்கள் என்று போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் வி.ஐ.பி. கலாச்சாரம்

சாமானிய மக்களுக்கு போலீஸ்  பாதுகாப்பு அளிப்பதில் பல சிக்கல் இருந்து வரும் நிலையில், நாட்டில் உள்ள 20 ஆயிரம் வி.ஐ.பி.க்களுக்கு பெரும்பாலான போலீசார் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். வி.ஐ.பி. கலாச்சாரம் முடிவுக்கு கொண்டு வருகிறோம் என்று ஆட்சியாளர்கள் கூறியபோதிலும், இந்த நிலை தொடர்ந்து வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு சமீபத்தில் ஒரு அறிக்கை வௌியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது-

56 ஆயிரம் போலீசார்

நாட்டில் மொத்தம் 19 லட்சத்து 26 ஆயிரம் போலீசார் பணியில் உள்ளனர். அவர்களில் 56 ஆயிரத்து 944 போலீசார் 29 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களில் உள்ள 20 ஆயிரத்து 822 வி.ஐ.பி.க்கள் (முக்கிய பிரமுகர்கள்) பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இது ஒவ்வொரு வி.ஐ.பி.க்கும் 3 போலீசார் என்ற விகிதத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதில் லட்சத்தீவுகள் மட்டும் விதிவிலக்காகும். இங்கு வி.ஐ.பி. எவருக்கும் போலீஸ் பாதுகாப்பு கிடையாது. ஏனெனில் அவர்களே தங்களுக்கு பாதுகாப்பு வேண்டாம் என தெரிவித்து விட்டனர்.

மக்கள் நிலை பரிதாபம்

அதே நேரத்தில் நாட்டில் வாழும் சாதாரண குடிமகனின் நிலை மிக பரிதாபமாக இருக்கிறது. மக்கள்663 பேருக்கு ஒரு போலீஸ் என்ற விகிதத்தில் மட்டுமே பாதுகாப்பில் இருக்கிறார்.  1 லட்சம் பேருக்கு 192 போலீசார் என்ற விகிதத்தில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

பீகார் முதலிடம்

தென் மாநிலங்களைக் காட்டிலும் வட மாநிலங்களில்தான் வி.ஐ.பி.க்களுக்கான போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் போடப்பட்டுள்ளது. அதில் பீகார் முதலிடம் வகிக்கிறது. அங்கு வி.ஐ.பி.க்கள்பட்டியலில் 3 ஆயிரத்து 200 பேர் உள்ளனர். அவர்களுக்கு 6 ஆயிரத்து 368 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மே.வங்காளம்

மேற்கு வங்காளத்தில் 2 ஆயிரத்து 207 வி.ஐ.பி.க்களுக்கு 4 ஆயிரத்து 233 போலீசாரும், ஜம்முகாஷ்மீரில் 2 ஆயிரத்து 75 வி.ஐ.பி.க்களுக்கு 4 ஆயிரத்து 499 போலீசாரும், உத்தர பிரதேசத்தில் ஆயிரத்து 901 வி.ஐ.பி.க்களுக்கு 4 ஆயிரத்து 681 போலீசாரும், பஞ்சாபில்  ஆயிரத்து 852 வி.ஐ.பி.க்களுக்கு 5315 போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

 மிகப் பெரிய மாநிலமான மஹாராஷ்டிராவில் 74 வி.ஐ.பி.க் களே உள்ளனர். அவர்களுக்கு 961 போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்கின்றனர்.

தென் மாநிலங்களில் குறைவு

தமிழ்நாட்டை பொறுத்த வரை மொத்தம் 109 வி.ஐ.பி.க்கள் உள்ளனர். அவர்களுக்கு 228 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

கேரளாவில் 57 வி.ஐ.பி.க்களுக்கு 214 போலீசாரும், கர்நாடகத்தில் 456 வி.ஐ.பி.க்களுக்கு 678 போலீசாரும், ஆந்திர பிரதேசத்தில் 432 வி.ஐ.பி.க்களுக்கு 1973 போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Budget 2026: எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கியதா 2026 பட்ஜெட்?! நீங்க எவ்ளோ வரி கட்டனும் தெரியுமா?
Budget 2026: கல்விக் கடன் சுமை இனி பாதியாக குறையும்! மருத்துவ மாணவர்களுக்கு மெகா சலுகை.!