அம்பானிக்கு உறவினர்.. ஒரு நிறுவனத்தின் CEO.. யார் இந்த அஞ்சலி மெர்ச்சண்ட் - அவர் Net Worth எவ்வளவு தெரியுமா?

By Ansgar R  |  First Published Oct 6, 2023, 10:47 PM IST

இந்தியாவின் முதல் பணக்காரராக திகழ்ந்து வருபவர் தான் முகேஷ் அம்பானி. பிரம்மாண்டம் என்ற சொல்லுக்கு விளக்கம் அளிக்கும் அளவிற்கு இவருடைய வீடு முதல் பயன்படுத்தும் கார்கள் வரை எல்லாமே பிரம்மாண்டமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.


முகேஷ் அம்பானி எந்த அளவிற்கு பெரிய பணக்காரரோ, அதே அளவிற்கு அவருடைய சொந்தக்காரர்கள் பலரும் பெரிய அளவில் பணக்காரராக திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் அவருடைய மகன் அனந்த் அம்பானிக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ள பெண் வழியில் உள்ள ஒரு பணக்கார பெண்ணை பற்றி தான் இந்த பதிவில் காணவுள்ளோம். 

அனந்த் அம்பானி போலவே அவருக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ள பெண்ணான ராதிகா மெர்ச்சண்ட் அவர்களும் ஒரு மிகப்பெரிய தொழிலதிபருடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவர்களுடைய நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், வருகின்ற நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் இவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tap to resize

Latest Videos

இனி வங்கி லாக்கரில் இந்த பொருள்களை மட்டுமே வைக்க முடியும்.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..

சரி அஞ்சலி மெர்ச்சண்ட் யார்?

அனந்த் மணந்துகொள்ளவிருக்கும் ராதிகாவின் அக்கா தான் அஞ்சலி மெர்ச்சண்ட், இவர் மும்பையில் உள்ள கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். அதன் பின் அஞ்சலி, மாசசூசெட்ஸில் உள்ள வெல்லஸ்லியில் உள்ள பாப்சன் கல்லூரியில் தொழில்முனைவு மற்றும் மூலோபாய மேலாண்மையில் இளங்கலை அறிவியல் பட்டத்தை (2008-2012) பெற்றார். பிறகு இங்கிலாந்தில் உள்ள லண்டன் பிசினஸ் ஸ்கூலில் முதுகலை வணிக நிர்வாகம் (2016-2018) பட்டம் பெற்றார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நிறுவன CEO 

அஞ்சலி மெர்ச்சன்ட் பல பட்டங்கள் பெற்ற ஒரு பணக்காரரின் மகள் மட்டுமல்ல, அவர் என்கோர் பார்மாசூட்டிகல் நிறுவனத்தில் இயக்குநராகவும், Dryfix என்ற நிறுவனத்தில் இணை நிறுவனராகவும்  உள்ளார். இந்த நிறுவனம் ஹேர் ஸ்டைலிங் மற்றும் ஹேர் ட்ரீட்மென்ட் கிளிப் சம்மந்தமான ஒரு நிறுவனமாகும். 

அவர் சொத்து மதிப்பு

அஞ்சலி மெர்ச்சண்டின் தந்தை வீரேன் மெர்ச்சண்ட் அவர்களின் நிகர மதிப்பு சுமார் ரூ. 755 கோடி என்றும் கூறப்படுகிறது. மேலும் அஞ்சலியின் சொத்து மதிப்பு 200 கோடிக்கும் அதிகமாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. டெபாசிட் செய்யப்பட்ட கோரப்படாத பணத்தை திரும்ப பெறலாம்..

click me!