பாம்புக்கு “எம்ஆர்ஐ ஸ்கேன்” : பிழைக்க வைத்த பாசக்காரன்...!

By thenmozhi gFirst Published Sep 22, 2018, 5:09 PM IST
Highlights

மும்பை புறநகர் பகுதியில் அடிபட்டுக் கிடந்த கட்டுவிரியன் பாம்புக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து, சிகிச்சை அளித்து ஒருவர் காப்பாற்றியுள்ளார்

மும்பை புறநகர் பகுதியில் அடிபட்டுக் கிடந்த கட்டுவிரியன் பாம்புக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து, சிகிச்சை அளித்து ஒருவர் காப்பாற்றியுள்ளார்

மும்பை புறநகர் பகுதியான தகிசரில் கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை யாரோ அடித்து அரைகுறை உயிருடன் போட்டிருந்தனர். இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ஹவல்தார் ஒருவர் பாம்பு பிடிக்கும் அனில் குபால் என்ற நபரை அழைத்து அந்த பாம்பை ஒப்படைத்தார்.

உடனடியாக செம்பூரில் உள்ள கால்நடை மருத்துமனையில் உள்ள மருத்துவர் தீபா கத்தியாரிடம், அனில் குபால் பாம்பை கொண்டு சென்றார்.டாக்டர்அந்த பாம்பை பரிசோதித்து பாம்பின் முதுகு எலும்பு உடைந்துவிட்டதாகத் தெரிவி்த்தார். அடுத்த கட்ட நடவடிக்கையாக முதுகின் எலும்புகள் எங்கு உடைந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்கவும், பாதிப்பை அறியவும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த பாம்பைக் கொண்டு சென்று எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்ப்டடது,ரேடியாலஜிஸ்ட் ரவி தபார் கவனமாக பாம்புக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தார். நாட்டிலேயே முதல்முறையாக பாம்புக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தது பார்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று டாக்டர் ரவி தபார் தெரிவித்தார்.

click me!