நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியபோது, அங்கு கூடிய பாஜக எம்.பி.க்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் சிலர் காயம் அடைந்துள்ளனர். பாஜகவும் காங்கிரஸும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம்சாட்டுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியபோது, அங்கு கூடிய பாஜக எம்.பி.க்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் சிலர் காயம் அடைந்துள்ளனர். பாஜகவும் காங்கிரஸும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் உரையாற்றிய மத்திய அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் குறித்து கீழ்த்தரமாக கருத்துகளைக் கூறியதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். பல எம்.பி.க்கள் அவரது பேச்சைக் கண்டித்து குரல் எழுப்பினர்.
undefined
இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை முதல் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) இரண்டாவது நாளாக அமித் ஷாவைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் 99.2% மொபைல் போன்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன; மத்திய அமைச்சர் தகவல்!
நாடாளுமன்ற நுழைவு வாயிலில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. கீழே விழுந்த பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி லேசான காயம் அடைந்தார். உடனே ஆம்புலன்ஸ் வந்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இதனால், பாஜக எம்.பி.க்களை ராகுல் காந்தி தள்ளிவிட்டார் எனவும் கீழே விழுந்து தனக்கு காயம் ஏற்பட்டுவிட்டது என்றும் பிரதாப் சந்திர சாரங்கி கூறுகிறார். பாஜகவினர் அனைவரும் ராகுல் காந்தி மீது குற்றம்சாட்டுகிறார்கள். மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு இது தொடர்பாக ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்.
ஆனால், காங்கிரஸ் எம்.பி.க்கள் தரப்பில் பதில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. பாஜக எம்.பி.க்கள் தள்ளிவிட்டதால் தனக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி.க்கள் 3 பேர் தாக்குதல் நடத்தினர் என்றும் கார்கே தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
மும்பை கடற்கரையில் 56 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 21 பயணிகள் மீட்பு!