காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகிறார் 90 வயதான மோதிலால் வோரா..?

By vinoth kumarFirst Published Jul 3, 2019, 4:48 PM IST
Highlights

ராகுல்காந்தி ராஜினாமாவை அடுத்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ராகுல்காந்தி ராஜினாமாவை அடுத்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும் எதிர்கட்சி அந்தஸ்தை கூட எட்டிப்பிடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அவர் கடிதம் கொடுத்திருந்தார். உயர்மட்ட தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ராஜினாமா கடிதத்தை திரும்பபெற வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அவர் ராஜினாமாவிலிருந்து பின் வாங்க முடியாது திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் தாமதம் இல்லாமல், புதிய தலைவரை கட்சி தேர்வு செய்ய வேண்டும். ஏற்கெனவே தாம் ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டதால், தாம் தலைவர் பொறுப்பில் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது என்றும் ராகுல் கூறினார். மேலும், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் தாம் பங்கேற்கப் போவதில்லை. எனவே காங்கிரஸ் காரிய கமிட்டி இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார். அவரது ராஜினாமா தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மோதிலால் வோராவுக்கு (90). 2 முறை மத்தியபிரதேச முதல்வராகவும், காங்கிரஸ் தலைவர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் மோதிலால் வோரா இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!