அடேங்கப்பா.! உ.பி.யில் புதிய எம்எல்ஏக்களில் பாதிக்கும் மேல் கிரிமினல் பின்னணி.. கோடீஸ்வரர்கள் இவ்வளவு பேரா?

Published : Mar 14, 2022, 09:17 AM IST
அடேங்கப்பா.! உ.பி.யில் புதிய எம்எல்ஏக்களில் பாதிக்கும் மேல் கிரிமினல் பின்னணி.. கோடீஸ்வரர்கள் இவ்வளவு பேரா?

சுருக்கம்

 புதிய எம்.எல்.ஏ.க்களில் கோடீஸ்வரர்கள் அதிகம் இருப்பது பா.ஜ.க.வில்தான். இக்கட்சியைச் சேர்ந்த 233 பேர் கோடீஸ்வரர்கள். சமாஜ்வாடி கட்சியில் 100 பேர் கோடீஸ்வரர்கள். அப்னாதளத்தில் 9 பேரும் ராஷ்டிரிய லோக்தளத்தில் 7 பேபேரும் கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.  

உத்தரப்பிரதேசத்தில் புதிதாக தேர்வான எம்.எல்.ஏ.க்களின் 51 சதவீதம் பேர் கிரிமினல் குற்றப் பின்னணி கொண்டவர்கள் ஆவர்.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கில் பாஜகவும் ஒன்றில் ஆம் ஆத்மியும் வென்றன. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தை இரண்டாவது முறையாக பாஜக தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில் உத்தரப் பிரதேச தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் பின்னணி பற்றி ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்தத் தகவல்கள் இதோ..

1. உத்தரப் பிரதேசத்தில் புதிய எம்.எல்.ஏ.க்களில் 91 சதவீதம் பேர், அதாவது 366 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். இந்த எண்ணிக்கை 2017 தேர்தலின் போது 322 ஆக இருந்தது. 

2. புதிய எம்.எல்.ஏ.க்களில் கோடீஸ்வரர்கள் அதிகம் இருப்பது பா.ஜ.க.வில்தான். இக்கட்சியைச் சேர்ந்த 233 பேர் கோடீஸ்வரர்கள். சமாஜ்வாடி கட்சியில் 100 பேர் கோடீஸ்வரர்கள். அப்னாதளத்தில் 9 பேரும் ராஷ்டிரிய லோக்தளத்தில் 7 பேபேரும் கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.

3. தற்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 8.06 கோடி ஆகும்.

4. இதில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சராசரி சொத்து மதிப்பு ரூ. 8.14 கோடி ஆகும். சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் சராசரி சொத்து மதிப்பு ரூ.7.39 கோடியாகும். அப்னாதளம் எம்.எல்.ஏ.க்கள் சராசரி சொத்து மதிப்பு ரூ.7.13 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 புதிய எம்.எல்.ஏ.க்கள் 51 சதவீதம் பேர் கிரிமினல் குற்றப் பின்னணி கொண்டவர்கள். அதாவது 205 பேர் குற்ற பின்னணி கொண்டவர்கள். கடந்த 2017-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 143 ஆகத்தான் இருந்தது. அதாவது 36 சதவீதமாக இருந்தது. ஆனால், இந்த முறை அந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கிரிமினல் பின்னணி கொண்டவர்களுக்கு மக்கள் அதிகளவில் வெற்றி வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். 

6. குறிப்பாக 39 சதவீத எம்.எல்.ஏ.க்கள் அதாவது, 158 எம்.எல்.ஏ.க்கள் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2017-இல் 107 ஆக இருந்தது.

7. பா.ஜ.க.வில் 111 எம்.எல்.ஏ.க்கள், சமாஜ்வாடியில் 71 எம்.எல்.ஏ.க்கள், ராஷ்டிரிய லோக்தளத்தில் 7 எம்.எல்.ஏ.க்கள் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!