கேரள மாநிலம் திருரில் இளைஞர் ஒருவர் கூரையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரது செல்போனை ஒரு குரங்கு பறித்துச் சென்றது.
மனிதர்களை குரங்குகள் தொல்லை செய்வது சகஜம் தான். தேங்காய்களை மரத்திலிருந்து கீழே தள்ளுவது, பயிர்களை அழிப்பது, உணவைப் பறிப்பது போன்ற செயல்களை குரங்குகள் செய்கின்றனர். ஆனால் சமீபத்தில் கேரளாவின் திருர் அருகே உள்ள மலப்புரத்தில் குரங்கு ஒரு வினோத செயலை செய்துள்ளது.. குரங்கு ஒரு செல்போனைப் பறித்தது மட்டுமல்லாமல், அதில் வந்த அழைப்பையும் அட்டென்ட் செய்தது.
திருரில், சங்கமம் ரெசிடென்சியின் மேல் தளத்தில் அலுமினியம் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவரின் செல்போனை ஒரு குரங்கு பறித்துச் சென்றது. தனது செல்போனை அருகிலுள்ள தகட்டின் மீது வைத்து அவர் வேலை செய்துள்ளார். அப்போது அங்கு வந்த குரங்கு அந்த இளைஞரின் செல்போனை தூக்கிக் கொண்டு, ஒரு தென்னை மரத்தில் ஏறியது.
அதானி, அம்பானி இல்லை.. இந்தியாவின் விலையுயர்ந்த பிளாட் யாருக்கு சொந்தம்?
இதனால் பதறிப்போன அந்த இளைஞர் தனது செல்போனை மீட்க முயன்றார்.. ஆனால் பலனளிக்கவில்லை, பின்னர், அவரது சக ஊழியர்களும், உள்ளூர்வாசிகளும் செல்போனை மீட்டெடுக்க முயன்றனர், ஆனால் குறும்பு குரங்கு அங்கேயே நிற்காமல், மேலும் உயர்ந்த கிளைகளுக்கு ஏறிச் சென்றது, இதனால் தொலைபேசியை மீட்டெடுக்கும் முயற்சி மேலும் சவாலானது.
undefined
இளைஞரும் அவரது நண்பர்களும் தொலைபேசியை மீட்டெடுக்க பல முயற்சிகள் செய்தும், எதுவும் கைகொடுக்கவில்லை. இதனிடையே அவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது, ஆனால் அந்த குரங்கு செல்போனின் பட்டனை அழுத்தி தனது தொலைபேசியை தனது காதில் வைத்தது. இதனை பார்த்த அனைவரும் எதிர்பாராத திருப்பத்தால் திகைத்துப் போனார்கள். கற்களை வீசுதல் உள்ளிட்ட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், குரங்கு அந்த செல்போனை போடவில்லை.
இந்தியாவின் நம்பர் 1 பீர் எது? விலை ரூ.200-க்குள் தான் இருக்கு!
பின்னர் ஒருவழியாக குரங்கு மற்றொரு மரத்திற்குத் தாவத் தயாராகிக் கொண்டிருந்தபோது, தொலைபேசி தரையில் விழுந்தது. மணிக்கணக்கில் முயற்சி செய்த பிறகு, இளைஞரும் அவரது நண்பர்களும் இறுதியாக தொலைபேசியை மீட்டனர்.