"மோடியின் திடீர் அறிவிப்பு பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும்” – நாராயணசாமி குற்றச்சாட்டு

Asianet News Tamil  
Published : Nov 10, 2016, 03:47 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
"மோடியின் திடீர் அறிவிப்பு பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும்” – நாராயணசாமி குற்றச்சாட்டு

சுருக்கம்

இந்தியாவில் 500ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்  நேற்றிரவு முதல் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை திமுக பொருளார் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுசெயலார் வைகோ, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும்,  ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் வரவேற்றுள்ளனர்.

இதனிடையே, வரும் 19ம் தேதி புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்காக, நெல்லித்தோப்பு தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேல்முருகன் நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் மோடியின் இந்த திடீர் அறிவிப்பு நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றும், வரிகட்டாதவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையினை மக்கள் தலையில் ஏற்றுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது நாராயணசாமி குற்றம்சாடியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: லெவல் 5 ஊழியர்களுக்கு மாதம் ரூ.15,800 வரை HRA உயருமா? முழு விவரம்.!
Rs 12000 Scholarship: 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.12,000; இந்த அரசு ஸ்காலர்ஷிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?