"ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு முதன்முறையல்ல" - முழு விவரம் இதோ..!!!

Asianet News Tamil  
Published : Nov 10, 2016, 01:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
"ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு முதன்முறையல்ல" - முழு விவரம் இதோ..!!!

சுருக்கம்

நாடு முழுவதும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் பல்வேறு முறை மத்திய அரசு இதே போன்ற முடிவை எடுத்திருக்கிறது. அதன் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

‌ ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் 1938 ஆம் ஆண்டு இந்தியா இருந்த காலத்தில் அதிக பட்சமாக 10 ஆயிரம் ரூபாய் அச்சடிக்கப்பட்டது. இந்திய ரிசர்‌வ் வங்கியின் கணக்கில் வராத பணங்களை தடுக்கும் நோக்கில் 1946 ஆம் ஆண்டு ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை செய்தது.

1954 ஆம் ஆண்டு மக்கள் வசதிக்காக 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. இதனால், பல நிதி குளறுபடிகள் எழுந்ததுடன் பயங்கரவாதிகள் லட்ச கணக்கில் பணத்தை சுலபமாக கடத்துவதாக உளவுத்துறை எச்சரித்தது. ‌

இதனையடுத்து, 1978 ஆம் ஆண்டு, ஆயிரம், 5 ஆயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அப்போதைய பிரதமர் மொராஜி தேசாய் அறிவித்தார். 2000 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, இதனை தளர்த்தி ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என அறிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: லெவல் 5 ஊழியர்களுக்கு மாதம் ரூ.15,800 வரை HRA உயருமா? முழு விவரம்.!
Rs 12000 Scholarship: 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.12,000; இந்த அரசு ஸ்காலர்ஷிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?