
பினாமி சொத்துக்களை பறிமுதல் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
கறுப்புப் பண புழக்கத்தை தடுக்கும் வகையில், 1988ல், கொண்டு வரப்பட்டுள்ள பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்து, புதிய மசோதாவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார்.
இதுகுறித்த சட்டம் கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்நிலையில், பினாமி சொத்துக்களை பறிமுதல் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர மோடி வலியுறுத்தியுள்ளார்.
நிதி அமைச்சக அதிகாரிகளுடனான கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பினாமி சொத்துக்களை பறிமுதல் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வரி ஏய்ப்பை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் வரியை நிர்ணயிப்பதிலும் வரியை வசூல் செய்வதிலும் மின்னணு முறை தேவை எனவும், பிரதமர் தெரிவித்துள்ளார்.