பிரதமர் மோடியின் புத்தாண்டு பேச்சு; மிகப்பெரிய ‘3 ஜாக்பாட்’ அறிவிப்புகள் இருக்குமாம்...வெளியில் கசிந்த தகவல்களால் பரபரப்பு

Asianet News Tamil  
Published : Dec 31, 2016, 03:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
பிரதமர் மோடியின் புத்தாண்டு பேச்சு; மிகப்பெரிய ‘3 ஜாக்பாட்’ அறிவிப்புகள் இருக்குமாம்...வெளியில் கசிந்த தகவல்களால் பரபரப்பு

சுருக்கம்

பிரதமர் மோடியின் புத்தாண்டு பேச்சு; மிகப்பெரிய ‘3 ஜாக்பாட்’ அறிவிப்புகள் இருக்குமாம்...வெளியில் கசிந்த தகவல்களால் பரபரப்பு

ரூபாய் நோட்டு தடை அறிவிக்கப்பட்டு 50 நாட்கள் நிறைவடைந்தபின், பிரதமர் மோடி இன்று இரவு 7.30 மணி அளவில் பேசுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

130 கோடி மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டியுள்ள அந்த உரையில், எதிர்பாராத சில சலுகைகளும், மிகப்பெரிய ஜாக்பாட் அறிவிப்புகளும், அடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கைகளும் இருக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் பல இன்னல்களையும், துன்பங்களையும் அனுபவித்த மக்களின் மனதுக்கு மருந்து போடும் விதமாக பிரதம மோடியின் பேச்சு இருக்கும் என  பாரதிய ஜனதா கட்டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் கடந்த நவம்பர் 8-ந்தேதி புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் அறிவித்தார். அதைத்தொடர்ந்து  அடுத்த 50 நாட்களுக்கு பொறுமை காக்க வேண்டும், அதன்பின் நிலைமை சரியாகிவிடும் என மக்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இந்த 50 நாட்களில் மக்களுக்கு வங்கியிலும், ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாள் ஒன்றுக்கு ரூ.2500, வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதனால், நாட்டில் சிறு, குறுந்தொழில்கள், தொழிற்சாலைகள் மூலப்பொருட்கள் வாங்க பணம் இல்லாததால் நசியும் நிலைக்கு வந்தது.  சாலை ஓர வியாபாரிகள், தள்ளுவண்டி கடைக்காரர்கள், காய்கறி விற்பனையாளர்கள் என அனைவரும் அழிவின் விழிம்புக்கு தள்ளப்பட்டனர். 

இந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்த 50 நாட்கள் கெடு நேற்றோடு முடிந்தது. புத்தாண்டு பிறப்பை ஒட்டி, பிரதமர் மோடி மக்களுக்கு வாழ்த்துச் செய்தியையும், கடந்த 50 நாட்கள் பொறுமை காத்த மக்களுக்கு நன்றி அறிவிப்பையும், சிலஜாக்பாட் அறிவிப்புகளையும் வௌியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து பாரதிய ஜனதா வட்டாரங்கள் கூறுகையில், “ கடந்த 50 நாட்களாக மக்களின் வாங்கும் சக்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதை ஊக்கப்படுத்த சில முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்படலாம். இப்போது டிஜிட்டல்பரிமாற்றத்தை நோக்கி மக்களை மோடி கொண்டு சென்று கொண்டு இருப்பதால், அதற்கு விதிக்கப்பட்டுள்ள சேவையை வரிநீக்கலாம், ஒட்டுமொத்த சேவை வரியா 15 சதவீதத்தை பாதியாகக் குறைக்கலாம். 

சிறு, குறுந்தொழில்கள், வியாபாரிகள் இந்த 50 நாட்களில் வியாபாரத்தை இழந்து, பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், சில சலுகைகளை பிரதமர் மோடி அறிவிக்கலாம். 

50 நாட்களில் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவ்வப்போதுமத்தியஅரசு சில சலுகைகளை அறிவித்தது. குறிப்பாக பழைய ரூ.500 பயன்படுத்தி விதைகள், உரங்களை வாங்க அனுமதி கொடுத்தது. வங்கியில் கடனை திருப்பிச்செலுத்த 90 நாட்கள் அவகாசம் கொடுத்து, முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வட்டியில் தள்ளுபடியும் கொடுத்தது. 

இந்நிலையில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களை டிஜிட்டல்பரிமாற்றத்துக்கு கொண்டு வரும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் அறிவிப்புகள் வெளியாகும். 

இதில் முக்கியமாக டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் வகையில், அனைவருக்கும் செல்போன் வழங்கும் திட்டம் அல்லது குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் செல்போன் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல் பீம் செயலியை நேற்று அறிவித்துள்ளார் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது. 

அடுத்ததாக கருப்புபணத்துக்கும் எதிரான அடுத்த கட்ட தீவிர நடவடிக்கைகள் குறித்தும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பினாமி சொத்துக்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்தும் அவர் பேசலாம் எனத் தெரிகிறது. 

ஏனென்றால், கடந்த 50 நாட்களில் எதிர்பார்த்த கருப்புபணம் வெளியாகவில்லை. மாறாக அந்த கருப்புபணத்தில் பெரும் பகுதி பினாமி பெயரில் சொத்துக்களுக்காக இருப்பது வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பிரதமர் மோடியின் கவனம் அடுத்து பினாமி சொத்துக்களுக்கு எதிராக திரும்பும் எனக் கூறப்படுகிறது. 

இன்னும் சில மணி நேரங்கள்தானே பொறுமையாக இருப்போம்...

 

 

PREV
click me!

Recommended Stories

Goa Shopping: கோவா போறீங்களா? சீப்பா ஷாப்பிங் செய்ய சூப்பர் இடங்கள் இதோ..!
Goa Adventure: பீச், பார்ட்டி மட்டும் இல்ல... த்ரில் அனுபவங்களுக்கு கோவா வாங்க!