PM Modi : 70 வயதிலும் செம்ம கெத்தாக நடந்து வந்த மோடி… ஜிம்னாஸ்டிக் மேன் புதினுக்கு கொடுத்த டப்!!

By Narendran SFirst Published Dec 7, 2021, 3:26 PM IST
Highlights

70 வயதை கடந்தும் தற்காப்பு கலைகளில் தேர்ந்த ஜின்னாஸ்டிக் மேன் புதினுக்கே டப் கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி நடந்து வரும் புகைப்படம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

70 வயதை கடந்தும் தற்காப்பு கலைகளில் தேர்ந்த ஜின்னாஸ்டிக் மேன் புதினுக்கே டப் கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி நடந்து வரும் புகைப்படம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர் மோடி-ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கும் இரு நாடுகள் இடையேயான 21வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக டெல்லி வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்,  அரசு விருந்தினர்கள் தங்கும் மாளிகைக்கு சென்றார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேசிய பிரதமர் மோடி, கடந்த சில பத்தாண்டுகளில் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், இந்தியா மற்றும் ரஷ்யா வின் நட்புறவு நிலையானதாக இருப்பதாக கூறினார். இந்தியா - ரஷ்யா இடையிலான நட்பு, உண்மையில் இரு நாடுகளுக்கு இடையிலான தனித்துவம் மற்றும் நம்பகதன்மையின் எடுத்துக்காட்டு என்று அவர் தெரிவித்தார்.  நட்பு நாடான இந்தியா உடனான உறவு தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும், எதிர்காலத்திலும், இதையே எதிர்நோக்கி இருப்பதாகவும் ரஷ்ய அதிபர் புதின் குறிப்பிட்டார்.

இருநாடுகளின் பரஸ்பர முதலீடு 38 பில்லியன் டாராக உள்ள நிலையில் இந்தியாவில் மேலும் முதலீடு செய்யப்படும் என்றும், வேறு எந்த நாட்டையும் விட ராணுவம் மற்றும் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவுக்கு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் புதின் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இருதலைவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முன்னதாக இரு நாடுகளின் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையேயான 2+2 பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையின்போது இந்தியா-ரஷியா இடையே 5,200 கோடி ரூபாய்க்கு ராணுவம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ரஷிய தயாரிப்பான நவீன ரக ஏ.கே.203 தானியங்கி துப்பாக்கிகளை இந்திய ராணுவத்துக்கு வாங்கவும் ஒப்பந்தமிடப்பட்டது. பின்னர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பிரதமர் மோடியும் சேர்ந்து நடந்து செல்லும் புகைப்படத்தை பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறித்தும் சந்திப்பு குறித்தும் பகிர்ந்தார்.  அந்த புகைப்படத்தில் பிரதமர் மோடி கம்பீரமாக நடந்து வருவதை பலரும் பகிர்ந்து எழுபதை தாண்டிய வயதிலும் பிரதமர் மோடி கம்பீரமாக ராஜநடை போடுகிறார் என்று தெரிவித்திருந்தனர். அதேபோல் ரஷ்ய அதிபர் புதினும் 70 நெருங்குகிறார். ஆனால் அவரும் சாதரணமானவர் அல்ல. ரஷ்ய அதிபர் புடின் தனது 11 வயதிலிருந்தே ஜூடோ பயிற்சி செய்து வருகிறார். பின்னர் சம்போவுக்கு மாறினார். சாம்போ என்பது ஒரு சோவியத் தற்காப்புக் கலை. இதுமட்டுமின்றி இந்த இரு கலைகளிலும் தேர்ந்த புடின், 2012 ஆம் ஆண்டில் கருப்பு பெல்ட்டின் எட்டாவது டான் என்ற அந்தஸ்தையும் பெற்றார். இந்த அந்தஸ்தை பெற்ற முதல் ரஷ்யர் புடின் ஆவார். இத்தகைய பின்புலத்தை கொண்ட புடின் நடந்து வர அவருக்கே டப் கொடுக்கும் அளவிற்கு பிரதமர் மோடி எழுவது வயதை கடந்தும் கம்பீர நடைபோட்டு வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

click me!