ஏழைகளின் வறுமையின் பசியை உணர்ந்த மோடி... ஏப்ரல் 20க்கு பிறகு உங்களது தொழிலை நீங்கள் செய்யலாம்..!

By vinoth kumarFirst Published Apr 15, 2020, 11:40 AM IST
Highlights
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், 2-வது கட்டமாக மேலும் 18 நாட்கள் ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி நேற்று அறிவிப்பை வெளியிட்டார். மேலும், வரும் 20-ம் தேதி வரையில் முழு ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் எனக் கூறிய அவர், கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் 20-ம் தேதிக்கு பிறகு, ஒரு சில நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருந்தார். 
ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், விவசாயிளுக்கு பெரும்பாலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், 2-வது கட்டமாக மேலும் 18 நாட்கள் ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி நேற்று அறிவிப்பை வெளியிட்டார். மேலும், வரும் 20-ம் தேதி வரையில் முழு ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் எனக் கூறிய அவர், கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் 20-ம் தேதிக்கு பிறகு, ஒரு சில நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருந்தார். அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகம் ஊரடங்கு பற்றிய நெறிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது. 


அதில், ஏப்ரல் 20-ம் தேதிக்கு பிறகு ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். மேலும், விவசாயம், தோட்டக்கலை, விளைபொருள் கொள்முதல் மற்றும் பண்ணைத் தொழிலுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மீன், இறைச்சிக் கடைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்துள்ள மத்திய அரசு, மீன் பிடித்தல், மீன் சார்ந்த பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல அனுமதியளித்துள்ளது.


மேலும், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்றலாம்.  விவசாயத்துக்கு தேவையான பொருட்கள் விற்கும் கடைகள், உதிரிபாக விற்பனை கடைகள் திறந்திருக்கும். அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்களை திறக்கலாம்.  ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். வங்கிகள், இன்சூரன்ஸ் அலுவலகங்கள்,ஏ.டி.எம்.கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
click me!