இணைபிரியா மோடி-அமித்ஷா கூட்டணி..! அன்றும் இன்றும்..!

By Manikandan S R SFirst Published Dec 15, 2019, 5:02 PM IST
Highlights

2001ல் மோடி குஜராத் முதல்வராக பொறுப்பேற்றதும் அமித்ஷாவிற்கான முக்கியத்துவங்கள் அதிகரித்தன. பல முக்கிய துறைகள் மோடி அமைச்சரவையில் அமித்ஷா வசம் இருந்தன. ஒரே நேரத்தில் 12 துறைகள் வரை அமித்ஷா அமைச்சராக கையாண்டு இருக்கிறார்.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் இடையிலான நட்பு நாடறிந்தது. கடந்த 2014 ம் ஆண்டு மோடி முதன்முதலாக பிரதமராக பொறுப்பேற்க பெரிதும் உதவியது உத்தரபிரதேச மாநிலத்தில் பெற்ற வெற்றி தான். அதை சாத்தியப்படுத்தியவர் அமித்ஷா.

மோடிக்கும் அமித்ஷாவிற்கும் இடையிலான நட்பு சில ஆண்டுகளுக்கு முன் உருவாகியதல்ல. கடத்த 1982ம் ஆண்டு இருவருமே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்த போது சந்தித்து கொண்டனர். 1995ல் குஜராத்தில் காங்கிரசை வீழ்த்தி பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருவரும் பெரும்பங்கு வகிக்க அதன்பிறகே அரசியலில் மோடியும் அமித்ஷாவும் தீவிரமாக இணைந்து செயலாற்ற தொடங்கினர்.

2001ல் மோடி குஜராத் முதல்வராக பொறுப்பேற்றதும் அமித்ஷாவிற்கான முக்கியத்துவங்கள் அதிகரித்தன. பல முக்கிய துறைகள் மோடி அமைச்சரவையில் அமித்ஷா வசம் இருந்தன. ஒரே நேரத்தில் 12 துறைகள் வரை அமித்ஷா அமைச்சராக கையாண்டு இருக்கிறார். இந்தியாவை இணைந்து ஆள்வதற்கான முன்மாதிரியை இருவரும் அப்போதே தொடங்கியுள்ளனர். மோடியின் செல்வாக்கு நாடு முழுவதும் அதிகரித்து அவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட போது அவரது வெற்றிக்காக அமித்ஷா பெரும்பங்கு ஆற்றி இருக்கிறார்.

2014ல் பாஜகவிற்கு உத்தரபிரதேசத்தில் பெற்று தந்த அசுர வெற்றிக்காக அமித்ஷா அக்கட்சியின் தேசிய தலைவராக அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு பாஜக பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ளது. தற்போது 2019ல் இரண்டாம் முறையாக மோடி பிரதமரானதும் அமித்ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

மோடி-அமித்ஷா கூட்டணி இன்னும் பல அசாத்தியங்களை சாத்தியப்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருவது கவனிக்கத்தக்கது.

click me!