மோடி 3.0 முதல் 100 நாளில் சாதித்தது என்ன? மகளிர் நலன் முதல் மருத்துவம் வரை பல சாதனைகள்!

By SG BalanFirst Published Sep 16, 2024, 2:19 PM IST
Highlights

மூன்றாவது முறையாக பிரதமரான மோடி என்ன செய்தார் என்ற கேள்விக்கு நீண்ட பதிலாக மோடி அரசு முதல் 100 நாட்களில் செய்த சாதனைகளின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

100 நாட்களில் ரூ. 3 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்

➢ சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் மற்றும் விமானப் பாதை வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
➢ மகாராஷ்டிராவில் உள்ள வாத்வான் மெகா துறைமுகம் ரூ. 76,200 கோடி செலவில் கட்டப்படுகிறது. இது உலகின் முதல் 10 துறைமுகங்களில் ஒன்றாக இருக்கும்.
➢ பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம்-IV (PMGSY-IV) மூலம் 62,500 கிமீ சாலைகள் மற்றும் பாலங்கள் கட்ட அல்லது மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 25,000 செலவில் சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு சாலை போடப்படுகிறது. இதற்கு ரூ.49,000 கோடி நிதி அளிக்கப்படுகிறது.
➢ இந்தியாவின் சாலைப் போக்குரவத்தை வலுப்படுத்த ரூ.50,600 கோடி முதலீடு செய்யவும், 936 கிமீ தூரம் கொண்ட 8 தேசிய அதிவேக சாலை வழித்தட திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

உள்கட்டமைப்பு மேம்பாடு 
➢ லடாக்கை இமாச்சல பிரதேசத்துடன் இணைக்கும் ஷிங்குன்-லா சுரங்கப்பாதைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
➢ வேகமான மற்றும் வசதியான ரயில் பயணத்திற்காக 8 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ஒப்புதல்.
➢ வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த ஒப்புதல்.  
➢ மேற்கு வங்கத்தில் பாக்டோக்ரா மற்றும் பீகாரில் பிஹாட்டா ஆகிய இடங்களில் புதிய சிவில் என்க்ளேவ்களைக் கட்டுதல்.  
➢ அகட்டி மற்றும் மினிகோயில் விமான ஓடுபாதைகள் அமைக்க ஒப்புதல்.  
➢ பெங்களூரு மெட்ரோ, புனே மெட்ரோ மற்றும் தானே ஒருங்கிணைந்த ரிங் மெட்ரோ ரயில் திட்டங்களின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல்.

விவசாயிகளுக்கான ஆதரவு திட்டங்கள்
➢ பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் 17வது தவணை வெளியீடு. 9.3 கோடி விவசாயிகளுக்கு ரூ. 20,000 கோடி நிதியுதவி விநியோகம். இதுவரை மொத்தம் 12.33 கோடி விவசாயிகள் ரூ.3 லட்சம் கோடி நிதியைப் பெற்றுள்ளனர்.
➢ 2024-25 காரிஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அதிகரிப்பு.  இது 12 கோடி விவசாயிகளை ஆதரிப்பதன் மூலம், அவர்களுக்கு சுமார் ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான லாபம் கிடைக்கும்.
➢ ஆந்திரப் பிரதேசத்தில் போலவரம் பாசனத் திட்டத்துக்கு ரூ. 12,100 கோடி ஒதுக்க ஒப்புதல். ரூ. 14,200 கோடி மதிப்பிலான ஏழு ஆண்டு முக்கிய திட்டங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.  
➢ விவசாயத் துறையில் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க டிஜிட்டல் வேளாண்மை மிஷன்.
➢ புதிய தேசிய ஒத்துழைப்புக் கொள்கையின் வரைவு நிறைவடைந்துள்ளது.
➢ தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் (NCOL) மற்றும் உத்தரகாண்ட் ஆர்கானிக் கமாடிட்டி வாரியம் இடையே ஒப்பந்தம்.  

கிசான் மித்ரா மோடி 
➢ வெங்காயம் மற்றும் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி வரி நீக்கம். வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரியை 40% லிருந்து 20% ஆக குறைப்பு.
➢ கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் எத்தனால் உற்பத்தி அலகுகளை தீவன வசதிகளாக மாற்ற நடிவடிக்கை. இதனால் மக்காச்சோளத்தில் எத்தனால் உற்பத்தியும் சாத்தியமாகும்.  
➢ சோயாபீன், சூரியகாந்தி மற்றும் கச்சா பாமாயில் மீதான வரி 12.5% ​​லிருந்து 32.5% ஆக உயர்வு.
➢ விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் விரிவாக்கம்.
➢ ஜம்மு காஷ்மீரில் ரூ. 3,300 கோடி மதிப்பிலான விவசாயத் திட்டங்கள்.  
➢ கிருஷி சஹாயா குழுக்களின் 30,000 பெண் விவசாயிகளை கௌரவித்தல்.  
➢ "மிஷன் மௌசம்" திட்டத்துக்கு ரூ. 2,000 கோடி ஒப்புதல்.  
➢ அக்ரிஸ்யூர் (AgriSure) என்ற புதிய நிதி தொடக்கம்.

நடுத்தர வகுப்பினருக்கான வரி நிவாரணம்
➢ ரூ. 7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரிச் சலுகை.  
➢ மாத ஊதியம் பெறுபவர்கள் ரூ. 17,500 சேமிக்க முடியும்.  
➢ நிலையான வரி விலக்கு ரூ. 75,000 ஆக அதிகரித்துள்ளது.  
➢ குடும்ப ஓய்வூதியத்தில் விலக்கு ரூ.25,000 வரை.  
➢ வரி விதிகளை எளிமைப்படுத்த விரிவான ஆய்வு.  
➢ 25 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களுக்கு சராசரி ஊதியத்தில் 50% ஓய்வூதியம்.  
➢ "ஒரே நாடு, ஒரே ஓய்வூதியம்" மூன்றாம் கட்டத்தை செயல்படுத்துதல்.

ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள்

➢ நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகளுக்கு ஒப்புதல். கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள், இதுவரை மொத்தம் 4 கோடியே 27 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.  
➢ பிரதமர் சூர்யா கர் முக்த் வித்யுத் யோஜனா மூலம் 2.5 லட்சம் வீடுகளில் சூரிய சக்தி அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
➢ சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்து போக்குவரத்துக்கு ஈ-பஸ் சேவையைத் தொடங்க ரூ. 3,400 கோடி நிதி உதவி.

தொடக்கங்களுக்கான ஆதரவு
➢ 31% ஏஞ்சல் வரியை நீக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 40% லிருந்து 35% ஆக குறைப்பு.  
➢ விண்வெளி ஸ்டார்ட்அப்களுக்கு ரூ. 1,000 கோடி தொழில்முறை உதவித்தொகை. GENESIS திட்டத்திற்கு ஒப்புதல்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வசதிகள்
➢ 12 தொழில்துறை மையங்களின் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பை உருவாக்குதல். 
➢ முத்ரா கடன் வரம்பு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக அதிகரித்துள்ளது.  
➢ சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பிணையமில்லாத கடன் திட்டம்.  
➢ பாரம்பரிய கைவினைஞர்களுக்கான இ-காமர்ஸ் ஏற்றுமதி மையங்களை உருவாக்குதல்.

இளைஞர் வலுவூட்டல்
➢ 41 மில்லியன் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு.  
➢ சிறந்த நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப்.
➢ 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி.  
➢ 15,000 புதிய பணியாளர்கள்.

தொழிலாளர்களுக்கு அதிகாரமளித்தல்
➢ ஊழியர்களுக்கு ரூ. 15,000 மூன்று தவணைகளில் செலுத்த வேண்டும்.  
➢ இ-ஷ்ரம் போர்டல் மூலம் தொழில்களை மேம்படுத்துதல்.

பெண்களுக்கு அதிகாரமளித்தல்
➢ 48 லட்சம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்காக ரூ. 2,500 கோடி சமாஜ் முதலீட்டு நிதி வெளியீடு.  
➢ 25.8 லட்சம் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ. 5,000 கோடி வங்கிக் கடன்.  

பழங்குடியின கிராமங்களின் வளர்ச்சி 
➢ பிரதம மந்திரியின் பழங்குடியின கிராம மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 63,000 பழங்குடியின கிராமங்களை மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன மூலம் 5 கோடி பழங்குடியினரின் சமூக-பொருளாதார நிலை மேம்பாட்டுள்ளது.
➢ நமஸ்தே திட்டத்தின் விரிவாக்கம்: இத்திட்டம் துப்புரவு பணியாளர்கள் மற்றும் கழிவுகளை எடுப்பவர்களுக்கு தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக கவரேஜ் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  
➢ மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக அடையாள அட்டைகள்: 3 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை (யுடிஐடி) வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டை பெற்றுள்ளவர்களில் 1.17 லட்சம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

OBC, தலித்துகள், சிறுபான்மையினர், பழங்குடியினருக்கு அதிகாரமளித்தல்
➢ பிரதமரின் சூரஜ் திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன்களை வழங்குதல்.  
➢ ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 1.23 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். 40 புதிய பள்ளிகளைத் தவிர, 110 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.  
➢ வக்ஃபு (திருத்தம்) மசோதா, 2024: ஆன்லைன் பதிவு மற்றும் வக்ஃபு சொத்துக்களை கண்காணிப்பதற்கான டிஜிட்டல் தளம் உருவாக்கம்.

சுகாதார சேவைகள்
➢ ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தி 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச காப்பீடு.  4.5 கோடி குடும்பங்களில் 6 கோடி மூத்த குடிமக்கள் பயனடைவார்கள்.  
➢ 75,000 புதிய மருத்துவ இடங்களைச் சேர்ப்பதன் மூலம் நாட்டில் மருத்துவ சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல்.  
➢ U-WIN போர்டல் துவக்கம்: வழக்கமான தடுப்பூசிகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.  
➢ தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மருத்துவர்களின் விவரங்களை நிர்வகிக்கும் தேசிய மருத்துவப் பதிவேட்டை உருவாக்குகிறது.

மருத்துவ சேவைகள் 
➢ பெண்கள், இளைஞர்கள் மற்றும் பழங்குடியினர் மத்தியில் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
➢ புற்றுநோய் சிகிச்சையில் உள்ளவர்களின் நிதிச்சுமையை குறைக்க 3 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரி சலுகையை அமல்படுத்தப்பட்டுள்ளது.
➢ PM E-DRIVE திட்டத்தின் கீழ் மின்சார ஆம்புலன்ஸ்களுக்கு ரூ. 10,900 கோடி நிதி ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
➢ ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் (ABHA) இப்போது "ஸ்கேன் & ஷேர்" அம்சத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம் 4 கோடி வெளிநோயாளர் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப மற்றும் அறிவியல் முன்னேற்றம்

➢ சந்திரயான் மற்றும் மங்கள்யானின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில், முதல் தேசிய விண்வெளி தினம் ஆகஸ்ட் 23 அன்று கொண்டாடப்பட்டது.  
➢ விண்வெளி ஸ்டார்ட்அப்களுக்கு ரூ. 1000 கோடியில் தொழிற்கல்வி நிதியத் திட்டம் நிறுவப்பட்டது.  
➢ ஆகஸ்ட் 16 அன்று SSLV-D3 ராக்கெட் மூலம் EOS-08 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது.  
➢ SSLV ராக்கெட் மூலம் மினி, மைக்ரோ அல்லது நானோ செயற்கைக்கோள்களை 500 கிமீ சுற்றுப்பாதையில் செலுத்த முடியும்.  
➢ ரூ. 50,000 கோடி தேசிய ஆராய்ச்சி நிதி மற்றும் ரூ. 10,500 கோடியில் 'விக்யான் தாரா' திட்டம் உருவாக்கப்பட்டது.  
➢ செமிகண்டக்டர்கள்: குஜராத்தின் சனந்தில் செமிகண்டக்டர் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு 6 மில்லியன் செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. செமி கண்டக்டர் ஆலைகளை நிறுவியதன் மூலம் உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தியாளராக இந்தியா உருவாகியுள்ளது.
➢ நாடு தழுவிய பேரிடர் மேலாண்மைக்காக தேசிய தரவுத்தளம் புவன் பஞ்சாயத்து போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மற்றும் சட்ட சீர்திருத்தங்கள்
➢ ஜூலை 1, 2024 அன்று, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்குப் பதிலாக 3 புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை, பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நாகரிகா சுரக்ஷா சன்ஹிதா (BNSS), மற்றும் பாரதிய சபாய ஆதினியம் (BSA).  
➢ அழிந்து வரும் உயிரினங்கள், நிதிக் குற்றங்கள் மற்றும் அறிவியல் சான்றுகள் தொடர்பான சட்டங்களுடன் சட்ட அமைப்பை வலுப்படுத்துதல்.
➢ அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயருக்கு ஸ்ரீ விஜயபுரா என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
➢ திறம்வாய்ந்த நீதித்துறை அமைப்பிற்காக 'தேசிய தடயவியல் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (NFIES)' அறிமுகம்.
➢ பொதுத் தேர்வுகள் வினாத்தாள் கசிவு பிரச்சனையைத் தீர்க்க, பொதுத்தேர்வு மோடிகளைத் தடுக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆளுகை, சட்ட அமைப்பு 
➢ CPGRAMS திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைகளைத் தீர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குதல்.
➢ பூர்வோதயா திட்டத்தில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் விரிவான வளர்ச்சித் திட்டம்.
➢ நகர்ப்புற ஓடை மேலாண்மை மற்றும் பனிப்பாறை, ஏரி புயல் நீர் அபாயம் தணிப்பு திட்டங்களுக்கு ரூ. 6,350 கோடி ஒதுக்கீடு.  
➢ லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் (ஜான்ஸ்கர், திராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தோங்) உருவாக்கப்பட்டன. இதனால் அங்கு மொத்தம் 7 மாவட்டங்கள் (லே மற்றும் கார்கில் உட்பட) உள்ளன.
➢ அவசரநிலை பிரகடனம் செயப்பட்ட ஜூன் 25ஆம் தேதியை 'சம்விதன் ஹத்ய திவாஸ்' ஆகக் கடைப்பிடிப்பதாக அறிவிப்பு.

ஆற்றல் பாதுகாப்பு

➢ வடகிழக்கு இந்தியாவில் நீர் மின் திட்டங்களுக்கு ஒப்புதல். வி.ஜி.எஃப் (VGF) திட்டத்தின் கீழ் ரூ. 12,400 கோடி மதிப்பிலான நீர்மின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
➢ கடலோர காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களுக்கு ரூ. 7,450 கோடி ஒப்புதல்.  
➢ தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன்: எலக்ட்ரோலைசர் உற்பத்தி திறனை 1.5 ஜிகாவாட்டாக அதிகரிக்க 2வது தவணை நிதி வெளியீடு.

➢ பொதுத்துறை பிரிவுகளுக்கான சுற்றுச்சூழல் புதுப்பித்தலின் ஒரு பகுதியாக 'பசுமை கடன் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது.  
➢ இந்தியாவில் 3ஆம் கட்ட மின்சார வாகன மானியத் திட்டம் (FAME) திட்டத்தை செயல்படுத்தப்பட்டுள்ளது.

வெளியுறவுக் கொள்கை
➢ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஃபிஜியின் உயரிய சிவிலியன் விருதினால் கௌரவிக்கப்பட்டார்.  
➢ ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நிறுத்தத்தின்போது பிரதமர் மோடியின் இரு நாடுகளுக்கும் பயண மேற்கொண்டார். G-7 உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.
➢ மோடி முதல் முறையாக சிங்கப்பூர் மற்றும் புருனே சென்றார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரியாவுக்கும், 45 ஆண்டுகளுக்குப் பிறகு போலந்துக்கும் இந்தியப் பிரதமர் பயணித்துள்ளார்.
➢ குளோபல் சவுத் மாநாட்டு நிகழ்ச்சியில் 120 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
➢ முதன்முறையாக யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவின் கூட்டத்தை இந்தியா நடத்தியது.

பேரிடர் மேலாண்மை
➢ பேரிடர் மேலாண்மை (திருத்த) மசோதா 2024 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.  
➢ பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ. 12,554 கோடி ஒதுக்கீடு.  பேரிடர் நிவாரண நிதிகளின் (NDMF, SDRF) கீழ் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
➢ அவசரகால மீட்பு உதவு அமைப்பு (ERSS 2.0) செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
➢ ஆந்திராவில் வெள்ள பாதிப்பு குறித்து அறிய சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைப்பு
➢ NLFT மற்றும் ATTF உடன் 35 வருட ஆயுத மோதலுக்குப் பிறகு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 328 ஆயுதமேந்திய செயற்பாட்டாளர்கள் சமாதான உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
➢ 5,000 சைபர் கமாண்டோக்களுக்கு 5 ஆண்டுகளில் பயிற்சி அளிக்கப்படும்.  
➢ சைபர் குற்றங்களைப் புகாரளிக்க சைபர் தோஸ்த் (CyberDost) மொபைல் செயலி தொடங்கப்பட்டுள்ளது. சைபர் குற்றத்திற்கான 'சமன்வே' தளமும் திறக்கப்பட்டுள்ளது.

click me!