பத்து பெண்களை திரட்டி கணவன் மூக்கை உடைக்க வேண்டும் - கிரண்பேடி பரபரப்பு பேச்சு...!

 
Published : Mar 10, 2018, 08:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
பத்து பெண்களை திரட்டி கணவன் மூக்கை உடைக்க வேண்டும் - கிரண்பேடி பரபரப்பு பேச்சு...!

சுருக்கம்

Mobilize ten women to break the nose of husband

குடித்துவிட்டு கணவன் அடித்தால், அருகில் உள்ள 10 பெண்களை திரட்டி, ஒன்று சேர்ந்து கணவனை தாக்கி, மூக்கை உடைக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பேசியுள்ளார். 

முற்காலத்தில் பெண்கள் வீட்டு வேலை மட்டும் செய்து வந்தனர். ஆனால் பரிணாம வளர்ச்சி மாற மாற பெண்களின் வளர்ச்சியும் மாறிக்கொண்டே வருகின்றது. 

ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். 1910ம், ஆண்டு  ஓப்பன் ஹேகனில் கிளாரா ஜெட்கின் தலைமையில் அனைத்துலக பெண்கள்  மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. 

பின்னர் சர்வதேச மாதர் அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் சார்பாக 1911ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி  டென்மார்க் ஆஸ்திரியா ஜெர்மனி இன்னும் சில ஐரோப்பிய நாடுகளின் பெண் பிரதிநிதிகள் முதலாவது சர்வதேச மாதர் தினத்தைக் கொண்டாடினர். 

இந்த கொண்டாட்டத்தின் போதுதான் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மாதர் தினமாக கொண்டாட வேண்டுமென்பது முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மகளிர்தின கொண்டாட்டம் 8 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில், காரைக்காலில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கலந்து பேசினார். 

அப்போது, குடித்துவிட்டு கணவன் அடித்தால், அருகில் உள்ள 10 பெண்களை திரட்டி, ஒன்று சேர்ந்து கணவனை தாக்கி, மூக்கை உடைக்க வேண்டும் என தெரிவித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்
இப்ப பிரியங்கா காந்தி பிரதமரா இருந்தா நடக்குறதே வேற.. காங். கட்சிக்குள் குண்டு வீசிய மூத்த எம்.பி.!