
இந்தியா முழுவதும் 77ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் மூவர்ண கொடியேற்றி மரியாதை செய்தார். முதல்வர் ஸ்டாலின் முதல்வரான பின்னர் 3ஆவது முறையாக தேசியக் கொடியேற்றினார்.
இந்தியா தான் உலகையே வழிநடத்துகிறது.. சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்..
முன்னதாக, பாதுகாப்பு படையினரின் புடைசூழ கோட்டைக்கு வந்த முதல்வர் ஸ்டாலினை, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்று, முப்படை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து, காவல்துறையின் சிறப்பு அணி வணக்க மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சென்று காவல் துறையினரின் அலங்கார அணிவகுப்பை அவர் பார்வையிட்டார். அதன்பிறகு, கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றினார்.
சுதந்திர தின விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.