
நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிய பிரதமர் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்களிப்பை வழங்கிய அனைத்து துணிச்சலான இதயங்களுக்கும் தனது அஞ்சலியை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் "உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இப்போது முன்னணி நாடு. இவ்வளவு பெரிய நாடு, எனது குடும்பத்தில் உள்ள 140 கோடி உறுப்பினர்கள் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகிறார்கள். உலகத்திற்கே மிகப்பெரிய நம்பிக்கையை இந்தியா விதைத்துள்ளது.
இந்த முறை, இயற்கை பேரழிவு நாட்டின் பல பகுதிகளில் கற்பனை செய்ய முடியாத நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. இதை எதிர்கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, நம்மிடம் மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை உள்ளது - இவை மூன்றும் சேர்ந்து தேசத்தின் கனவுகளை நனவாக்கும் திறனைக் கொண்டுள்ளன. மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை ஆகிய மூன்றும் தேசத்தின் கனவுகளை நனவாக்கும் சக்தியைக் கொண்டுள்ளன:
கடந்த 1000 ஆண்டுகளை பற்றி பேசுகிறேன், ஏனென்றால் நாட்டிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இருப்பதை நான் காண்கிறேன். இந்த காலகட்டத்தில் நாம் என்ன செய்கிறோம், நாம் எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் நாம் எடுக்கும் முடிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக. வரும் 1000 ஆண்டுகளில் நாட்டின் பொன்னான சரித்திரத்தை உருவாக்கும்.
நாட்டில் வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை. எல்லையற்ற வாய்ப்புகளை வழங்கும் திறன் நாட்டிற்கு உண்டு. 2014-ல் ஆட்சிக்கு வந்தபோது உலகப் பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்தோம். இன்று 140 கோடி இந்தியர்களின் முயற்சியால் 5-வது இடத்திற்கு வந்துவிட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். நாட்டில் இருந்த ஊழலை ஒழித்து, வலுவான பொருளாதாரத்தை உருவாக்கினோம்.
இந்தியா என்ற பயணத்தில் நிலையாக இருக்க நிலையான அரசு தேவைப்படுகிறது. கொரோனாவுக்கு பிறகு இந்தியா தான் உலகையே வழிநடத்துகிறது. இந்த உலகம் நிலைத்தன்மையுடன் இயங்குவதற்கு இந்தியா தான் காரணம்.
கொரோனாவில் இருந்து உலகம் இன்னும் மீளவில்லை. போர் மற்றொரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இன்று உலகம் பணவீக்க நெருக்கடியை எதிர்கொள்கிறது. பணவீக்கம் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் அதன் பிடியில் வைத்துள்ளது.. ஆனால், பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது...உலகின் மற்ற நாடுகளை விட நமது நிலைமை சிறப்பாக உள்ளது என்பதற்காக நாம் திருப்தியடைய முடியாது. நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் உறுதியான அரசை தேர்வு செய்ய விரும்புகின்றனர்.
2014,2019-ல் வலுவான பெரும்பான்மை கொண்ட அரசை மக்கள் உருவாக்கினர். பெரும்பான்மை அரசு அமைந்ததால் சீர்திருத்தங்கள் செய்ய எனக்கு தையரிம் பிறந்தது. சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை நாட்டை மாற்றும் தாரக மந்திரம்.” என்று தெரிவித்தார்.
77-வது சுதந்திரன தினம்: டெல்லி செங்கோட்டையில் 10-வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!