போரை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிக்கலாம்- கர்நாடகா அமைச்சர் சர்ச்சை பேச்சு

Published : Apr 29, 2025, 08:53 PM IST
போரை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிக்கலாம்- கர்நாடகா அமைச்சர் சர்ச்சை பேச்சு

சுருக்கம்

ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி, போரை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிக்கலாம் என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்

பாகிஸ்தான் உடன் போர்- அமைச்சர் சர்ச்சை கருத்து

ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதல் குறித்து பெலகாவியில் பேசிய கர்நாடகா மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி, “நாளை காலை எட்டு மணிக்கு போரைத் தொடங்கி மாலை ஆறு மணிக்கு முடிக்கட்டும், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. போர் வேண்டுமா, வேண்டாமா என்று சொல்ல கர்நாடகா முதல்வர் கமாண்டரா? லெப்டினன்ட் கமாண்டரா?” என்று கேள்வி எழுப்பினார்.

ஏடிஎஸ்பி கன்னத்தில் அறைய முற்பட்ட கர்நாடகா முதல்வர்.! அதிர்ச்சியில் போலீசார்

போர் நடந்தால் என்ன பிரச்சினை

“போர் செய்யச் சொல்லிவிட்டு எல்லோரும் இங்கேயே அமர்ந்திருக்கிறார்கள். போர் நடந்தால் என்ன பிரச்சினை வரும் என்பது பின்னர் தெரியவரும். சித்தராமையா போர் நடந்தால் ஏற்படும் பொருளாதார சிக்கல்களைப் பற்றிப் பேசியுள்ளார். தேவைப்பட்டால் போர் செய்யலாம், அதில் எங்களிடம் கேட்பதற்கு என்ன இருக்கிறது? அவர்கள் தங்கள் தோல்வியைப் பற்றி பேசுவதில்லை. இதெல்லாம் சரியான அணுகுமுறை அல்ல” என்று சதீஷ் ஜார்கிஹோலி கூறினார். போர் நடந்தால் பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் வரும் என்பது தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுக்கூட்டத்தில் பாஜக தொண்டர்கள் நடத்திய கலாட்டா குறித்துப் பேசிய அவர், பாஜக தலைவர்கள் தொண்டர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்றார். “அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நிறைய வாய்ப்புகள் இருந்தன. இதை பாஜகவினர் சரிசெய்ய வேண்டும்” என்றார்.

ரூ.50 லட்சம் நிதி உதவி.! பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

தாக்க முயலவில்லை, கையசைத்தார்

ஏஎஸ்பியை முதல்வர் தாக்க முயன்ற சம்பவம் குறித்துப் பேசிய அவர், தாக்க முயலவில்லை, கையசைத்து கூறியுள்ளார். ஏன் இப்படி நடந்தது என்று போலீஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் என்றார். பீகாரில் மோடி பிரச்சாரத்தில் காஷ்மீர் விவகாரத்தைப் பயன்படுத்துவது குறித்துப் பேசிய அவர், அவர்களுக்கு வேறு விஷயங்கள் இல்லை, பாகிஸ்தான், முஸ்லிம் என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்.

பாஜக தொண்டர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பது குறித்துப் பேசிய சதீஷ் ஜார்கிஹோலி, அதை அவர்கள் மேடையில் சொல்லியிருக்க வேண்டும். நாளை எங்கள் ஆட்கள் போய் அவர்கள் நிகழ்ச்சியில் கலாட்டா செய்தால் சரியாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?
இண்டிகோ விமானம் ரத்து.. திருமண வரவேற்பில் வீடியோ மூலம் கலந்துகொண்ட புதுமணத் தம்பதி!